google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கேள்விக்குறி.....?

Wednesday, August 7, 2013

கேள்விக்குறி.....?

(குறிப்பு-
கொஞ்சம் பகுத்தறிவு சிந்தனை....
நிறையவும் பகுத்தறிவு பாதுகாப்பு)




ஏன்? 
எதற்கு? 
எப்படி?
கேள்விகளால் 
வேள்வி செய்தால்
நீ ஒரு பகுத்தறிவுவாதி! 


வாழ்வில் 
வரவு-செலவுகளை 
கூட்டி.....
கழித்து....
பெருக்கி.......
வகுத்துப் பார்த்தால் 
நீ ஒரு பகுத்தறிவுவாதி!

https://sphotos-a-ord.xx.fbcdn.net/hphotos-prn2/p480x480/972234_604255519597264_8150942_n.jpg

குண்டக்க மண்டக்க 
குண்டாலினி யோகம்
படுக்கையறை போகம் 
"கதவைத் திற 
காற்று வரட்டும்"
என்று குலைப்பார் 
திறக்காதே!
திறந்திருந்தால் 
நாய்தான் வரும் 
ஆதிகாலத்து ஈனம் 
அழிந்து போகும் மானம் 


"வா...
உன் வாழ்க்கையைப் 
புரட்டிப் போடுகிறேன்"
அழைப்பார்கள் 
அருகில் போனால் 
அவர்களே 
ஆண்டவனின் 
அவதாரம் என்பார்கள்  
உன் வாழ்க்கையை 
வரட்டியாக்குவார்கள்  

ஈமு கோழி 
வளர்ப்பவனிடம் 
ஏமாந்து போனால்...
பணம்தான் போகும் 
கடவுள் கோழி 
வளர்ப்பவனிடம் 
ஏமாந்து போனால்....
மானம் போகும் 

http://marcusampe.files.wordpress.com/2013/04/question-mark-and-world-globe.jpg

என்றும் நீ 
கேள்விகளால் 
வேள்வி செய்தால்
உன் வாழ்க்கையில்
என்றும் இல்லை
கேள்விக்குறி...?







இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1