அம்மா இட்லி-
முன்பெல்லாம்
இட்லியைப் பார்த்தால்
குஷ்பு ஞாபகம் வரும்
இப்போது வருவது
அம்மா ஞாபகம்
எங்க அம்மா ஞாபகம்
அய்யோ...
அதிமுக அம்மாவை
நான் சொல்லவில்லை...?
காவல் நிலையம்-
இங்கே
ஓடிப்போன காதலர்கள்
பாதுகாப்புடன்
ஒளிந்து கொள்ளலாம்
ஓடிப் போகவிருக்கும்
காதலர்களுக்கும்
கவுன்சிலிங் தரப்படும்
'எப்படி வில்லங்கம் இல்லாமல்
ஓடிப் போவது...?' என்று.
உண்டியல்-
நான் போட்ட
உண்டியல் பணத்தை
அப்படியே
(அரிசி)மண்டியில்
அத்தனையும்
போட்டிருந்தால்....?
இன்று நான்
போண்டியாகி
ஆண்டியாகி...
அடக்...கடவுளே!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |