உன்
கையசைவுக்கு
காத்திருந்தன
இசைக்கருவிகள்
நீ செய்த
சைகைக்கு
பிறந்தன
எத்தனையோ
பாடல்கள்
நீ
கன்னியரின்
கண் அசைவை
கண்கள் இரண்டால்...
இனிய இசையால்
இசை ஓவியம் தீட்டியவன்
இன்று ஏனோ
உன் கையசைவு
உன் கைகளுக்கு
விலங்கிட்டது
விளங்கவில்லை
இன்று ஏனோ
உன் சைகையே
உனக்கு ஒப்பாரியானது?
உஷார்......ஆண்களே!
உங்களுக்குப் பிடிக்காத
பெண்களைப் பார்த்தால்
ஐம்புலன்கள் மட்டுமல்ல
நீட்டிக்கொண்டிருக்கும்
(கைகள் கால்கள்........)
எல்லாப் புலன்களையும்
மடக்கிக் கொள்ளுங்கள்
இல்லையேல்.....
பாலியல் வன்கொடுமை
உங்கள் புலன்கள் எல்லாம்
புண்ணாகிவிடும்
உண்மை இங்கே
புரியாத புதிர்
உலகம் இங்கே
பிரபலங்களால்
பிரபல நரகமானது...
பிரபலமாய் இருப்பதும்
நரக வேதனையானது....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |


