என் ட்வீட்டர் நண்பர்களே!
நீங்கள் கீச்சு குருவிகளாய்
என்னுள் விதைத்தவை
ஆயிரமாயிரம்
ஆனந்தக் கனவுகள்
அன்றாடம் நிகழ்வுகளை
நச்சென்றும் நறுக்கென்றும்
அள்ளியும் கிள்ளியும் சொல்லி...
சில நேரங்களில்
சிந்திக்க வைக்கிறாய்...
சில நேரங்களில்
சிரிக்க வைக்கிறாய்...
RT மூலமாய் என்னை
பல ஆயிரம் பேருக்கு
அறிமுகப் படுத்தி...
இன்று என் நட்பு வானில்
ஜொலிக்கும் பல நட்சத்திரங்கள்
என் முகநூல் பக்கத்தில்
அவ்வப்போது வந்து
அழகு முகத்தைக் காட்டி
அன்பை விதைக்கும்
என் முகநூல் நண்பர்களே!
சில நேரங்களில்
அறுசுவை வார்த்தைகள்
சில நேரங்களில்
அறுவை வார்த்தைகள்
ஆனாலும்
உங்கள் வார்த்தைகளை
சுவாசிக்கும் நிமிடங்கள்
என்னுள் இருந்த சோகங்கள்
சொல்லாமல் கொள்ளாமல்
என்னையும் கொல்லாமல்...
எங்கோ ஓடி மறைகின்றன
உலகின் தூரத்தை
ஓரடியாக்கி.....
எந்த மூலையில் இருந்தாலும்
கூகுள் மூளையால்
கூடியும் குலாவியும்
என்றும் குதுகளிக்கும்
என் கூகுள் நண்பர்களே!
இன்றும் என்றும்
நாமொரு கூட்டம்
அதுவே விரட்டும்
நம்முள் எழும் வாட்டம்
இன்னும் என்னுள்
நறுமணம் வீசும்
என் நட்பூ வனத்தில்
நாளும் மலரும்
என் வலைப்பூ நண்பர்களே!
கருத்துக்களால்
என் வேலையின்
வியர்வைத் துடைக்கும்
கருத்தானவர்களே
எங்கிருந்தாலும்
இணையம் மூலம்
இணைந்த நண்பர்களே!
இன்று நண்பர்கள் தினம்
இன்று மட்டுமல்ல
என்றும் நமக்கு
நண்பர்கள் தினமே!
என்றும் நாம் நண்பர்களே!
வாழ்த்துக்கள் நண்பர்களே!
வாருங்கள் நண்பர்களே
இணையத்தால் இணைந்திருப்போம்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |