தவமாய்த்
தவமிருந்து
பெற்ற மகளை...
இன்றைய
தேசிய கீதம்
காதல்
பொற்காலம்
காட்டுவதாய்
கடத்திச் சென்றது
இந்தப்
பாண்டவர் பூமியில்
பாசம்-
புரியாத புதிர்
காதல்-
சேரன் பாண்டியன்
மன்னர்காலத்து
மாயக்கண்ணாடி....
காதலே!
நீ
அழகாய் இருக்கிறாய்
பயமாயிருக்கு
ஒ..
காதலில் விழுந்த
பாரதி கண்ணம்மா!
உன் வாழ்க்கை
அழகான
ஆட்டோகிராப்
அதை
காதல் வைரஸ்
அழிக்க விடாதே!
பிஞ்சுக் காதலில்
நீ
அவனுக்கு
ராமன் தேடிய சீதை
உண்மையில்
காம பொக்கிஷம்
காதல் தீயில்
அழிந்துப் போகாதே
யுத்தம் செய்
வெற்றிக் கொடிகட்டு
இங்கே
காதலன்+காதலி+பெற்றோர்
மூன்று பேர் மூன்று காதல்
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்...
நிழல் திரையில்
வித விதமாய்
காதலை விதைத்தவன்....
நிஜ வாழ்க்கையில்
மகளைக் கடத்தும்
காதல் கடத்தலால்...
கலங்கி நிற்கிறான்
இதுதான்
சேரன்
சொல்ல மறந்த கதை...
என்றும் முரண்
பிஞ்சுக்காதல்
நஞ்சுக் காதல்
சினிமா மூலம்
சமுதாயத்தைச் சீரழிப்பவன்
சங்கடத்தில் சீரழிவானோ....?
பிரிவோம் சந்திப்போம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |