google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இலவசமாக ஒரு கவிதை

Monday, August 12, 2013

இலவசமாக ஒரு கவிதை


இலவசம்-
அகராதியில்
ஆயிரம் அர்த்தங்கள்
காலமாற்றம்
இலவசத்தின்
உண்மையான அர்த்தம் 
பொய்யாகிப் போனது.


இலவசம்
இல்லாதவர்களுக்கு
இருப்பவர்கள்
உம்மா கொடுப்பது போல் 
சும்மா  கொடுப்பது...
அது யாருக்கு
யாரால் கொடுத்தது
என்பதில்தான் கிக்கு....?

mother


குழந்தைக்கு
அன்னை ஊட்டும்
இலவசத் தாய்பாலுக்கு
அன்றே காசு கேட்டால்..
அய்யோ பாவம்
அஃது என்ன செய்யும்...?
வளர்ந்தப் பிறகும்
காசுகேட்டால்
அன்னைக்கு அடைக்கலம்
முதியோர் இல்லம்

http://johnrchildress.files.wordpress.com/2012/08/father_and_son.jpg

பிள்ளைகளை
தந்தை வளர்ப்பதும்
இலவசமாகத்தான்
வளர்ந்த பிள்ளைகளிடம்
எதையேனும் எதிர்பார்த்தால் 
உதைதான் விழும் அப்பனுக்கு..?

கல்விக்குக் குருகுலம்
அங்கேயும் அன்று
தட்சணை இலவசம் 
இன்றும்   
தரமான கல்விக்கு 
கட்டணம் இலவசம் 

கடவுள் கூட
காசுவாங்காமல் 
தர்சிசனம் தருவதில்லை
எட்டி நின்று பார்க்க
இலவச தரிசனம்
எத்தனை நாள்....?
எதுவும் தெரியவில்லை

அரசு அலுவலகர்கள்
கையூட்டு வாங்குவதும்
இங்கே இலவசம்தான்
கைபூட்டுப் போடாதீர்கள்
இல்லாதவர்கள் வாங்குவது
எல்லாமே இலவசம்தான்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr819RE2A0u9QnZZhy33f5vFWMnoABI1iimqwZG9omhI51QHkay2-DRBfDOmrpKwEBTfRkIb31xO1VH8ZiHW-sswMX6PXA1KF-M3NrDdkYbD7Wiz2giTSYT01CPz1yK39mXWJ326KvDjk/s1600/deivam%20%20mohanraj.jpg

அரசியலில் மட்டும்
இலவசம் என்றால்
ஓட்டுக்கு என்று
ஒப்பாரி வைக்காதீர்...?
அடுத்தத் தேர்தலுக்கு
ஆளுக்கு ஒரு புட்டி
பாரின் சரக்கு இருக்கு.
எங்களுக்கு
ஒட்டு போட மட்டும்
மறந்துவிடாதீர்....

http://www.beyaznokta.org.tr/cms/images/201201102318_hukuk_sm.jpg
அறிவில் சிறந்த
அப்பாடக்கர்கள் 
எங்கள் நீதிமான்கள்..
எழுதி வைத்தார்கள் 
இலவசம் வேறு! லஞ்சம் வேறு!!  
அது சரி நியாயன்மார்களே!
எங்கள் அரசியல்வாதிகள்   
மாட்டை வளர்த்து 
பால்கரப்பது போல.... 
மதுக்கடைகள்  வைத்து அல்லவா
இலவசங்கள் அளிக்கிறார்கள்...?




 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1