google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: யார் இந்தப் பாட்டைக் கெடுத்தது....தலைவா?

Saturday, August 24, 2013

யார் இந்தப் பாட்டைக் கெடுத்தது....தலைவா?




(இது தலைவா திரைப்படத்தில் இடம்பெற்ற யார் இந்தச் சாலையோரம்....பாடல் பற்றிய ஒரு சிறப்புப் பதிவு.....இசைப்பிரியர்களுக்காக)




 


தலைவா திரைப்படத்தில் வரும் கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய....
 யார் இந்தச் சாலையோரம்......இந்தப் பாடல் வரிகளின்
அர்த்தமுள்ள வார்த்தைகள் ஜி.வி.பிரகாஷ் குமாரின்  இசையோடு பின்னிப் பிணைந்து.... 

நடிகர் விஜய்-அமலா பால் காதல் காட்சியாக ஜி.வி.பியும் சைந்தவியும் பாடும் ரொமண்டிக் மெலோடி...  
காதலன் காதலியிடம் கேள்வி கேட்பதுபோல்.......

யார் இந்தச் சாலை ஓரம் பூக்கள் வைத்தது...?
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது............என்று துவங்குகிறது.

அதற்குக் காதலியோ பதில் சொல்வதும் கேள்வி போல் தெரிந்தாலும்...
யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது...?
இன்று பேசாமல் கண்கள் பேசுது...என்று யார் என்னை முதலில் காதலித்ததோ அவரே அந்தக் காதல்  பூக்களை வைத்ததாகச் சொல்வது போல்  எழுதி பாடப்படுகிறது.....



thalaivaa

ஆனால் உடனே காதலர்கள் இருவரும் காதலில் சங்கமித்ததாகவும் அந்தக் காதலால் அவஸ்தைப் படுவதாகவும்......
காதலன் பாடுகிறான்....
நகராமல் இந்த நொடி நீள.....
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே..........என்றும் 

அதற்கு அவளும் தன் ஏக்கத்தை....
குளிராலும் கொஞ்சம் அணலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே....என்று இன்ப அவஸ்தையை உணர்த்துகிறாள்.

அப்புறம்தான் ஆரம்பிக்கிறது...அடடா...அய்டியா 
அவன் அவளிடம் ஒரு தீர்வு சொல்கிறான்...எப்படி?
அவனது ஆசைகள் எப்படியெல்லாம் மாறி...அவனை வாட்டுவதாகச் சொல்கிறான்
எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே...

அந்த ஆசை தீர அவளுக்கு ஆலோசனையும் சொல்கிறான்...
தீர தீர ஆசையாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி 
போகும் வரையில் தள்ளி நிற்கலாம்....என்று 
(இங்கே கவிஞர் நா.முத்துக்குமார் வார்த்தை வீச்சு....
ஒட்டிக்கொள்ளலாம் என்பதை மெல்ல தூரம் விலகி 
போகும் வரையில் தள்ளி நிற்கலாம்..என்று இசையோடு வார்த்தைகளை வடிக்கிறார்....)


                               thanks-YouTube-by Mohamed Azam

அவளும் அதற்குச் சலைத்தவள் அல்ல ...இருவருக்கும் நடக்கும் இந்தக் காதல் யுத்தத்தில் இருவரில் யாரேனும் தோல்வியைச் சந்திக்கலாம் அப்படி யார் தோல்வியடைந்தாலும் அந்தத் தோல்வியின் துயர் வெற்றி தரும் இன்பமே என்று......
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்குத் துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்

அதற்கு அவனோ...அந்த யுத்தத்தில் நான் என்னவோ ஆகிவிட்டேன்? எனக்கே தெரியவில்லை அதைப் போல் நீ என்ன ஆகிவிட்டாய்...?
 என்னாகிறேன் இன்று யேதாகிறாய்.........என்று கேட்க 

அவளோ..அடிக்கும் காற்றில் விரிக்கும் குடை அடித்துச் செல்லப்படுவது போல்........காதல் மயக்கத்தில் தள்ளாடுவதாக உவமையில் சொல்கிறாள்
எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்...என்று 

நம்ம காதலன் மட்டும் அவளுக்குக் குறைந்தவரா...? அவர் உடனே நீ மட்டுமா அப்படி...? என் நிலையைப் பார் ...?..
 எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே...........என்று பிதற்றுகிறான் 

அதுமட்டுமல்ல வெட்கத்தை விட்டு ஓடிவா...அதுதான் காதலில் நியதி...தியரி என்பது போல்....
மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையாய் விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே...என்று  அவன் காதல் தத்துவம் பேசிப் பாடிட.........


http://www.thehindu.com/multimedia/dynamic/01510/07_CP_vijay_1_jpg_1510013g.jpg

காதலியோ அவன் போலி தத்துவத்துக்குப்  பதிலும் தத்துவமாகப் பெண்ணின் நாணம் எப்படிப்பட்டது என்றும் அது மறைந்து இருக்கும் வரையே மவுசு என்றும் அழகாகச் சொல்கிறாள்....இப்படி 
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில் 
புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே....என்று பிகுபண்ண...

அவனோ...விட்டபாடில்லை இந்தக் காதலை ஆரம்பித்தது அவள்தான் என்றும் அவள் பார்வையாளால் அதை உணர்ந்ததாகவும்... 
கண்ஜாடையில் உன்னை அரிந்தேனடி...என்று அவளைச் சீண்ட...

அவளும்  நீதான் முதலில் இந்தக் காதலை ஆரம்பித்தவன் என்றும் என்னைத் தேடி வந்தவன் நீதான் என்றும் அவனிடம் சொல்கிறாள்....
என் பாதையில் இன்று உன் காலடி......என்று 

அதற்கு அவனோ..
நேற்று நான் பார்த்ததும் 
இன்று நீ பார்த்ததும்
நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி..?.என்று கேள்வியிலே ஆரம்பித்துக் கேள்வியிலே முடித்துவிடுகிறான் 


 இந்தப்படத்தில் இந்தப் பாடல் இவ்வளவு அருமையாக எழுதப்பட்டு அந்தத் திரைப்படத்தின்  வித்தியாசமானகாதல் கருவையும் வெளிப்படுத்துகிறது...ஆனால் அய்யகோ அதைப் படத்தில் பெயருக்குகூட ஒரு பூவை காட்டாமல் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி துறைமுகப் பாலத்தைக் காட்டியே....டங்கு டங்கு என்று டங்குவார் கிழிய மேலும் கீழும் நாயகன் நாயகியை குதிக்கவிட்டு........ யார் இந்தச் சாலை ஓரம் பூக்கள் வைத்தது...? பாடலின் நளினத்தையே கெடுத்துவிட்டார்கள் 
யார் இந்தப் பாட்டைக் கெடுத்தது....தலைவா?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1