google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அவள் இல்லையேல்.....

Sunday, August 18, 2013

அவள் இல்லையேல்.....

அவள்-
உயிரானவள் 
உனக்கும் 
எனக்கும் 
இந்த உலகுக்கும் 
உயிரானவள் 




 

அவளுக்கு 
உடல் இல்லை 
உருவம் இல்லை 
ஆனால் 
அவள் அசைந்தால் 
அகிலமும் அசையும் 

அவள் 
நடந்தால்....
தாலாட்டு 

அவள் 
சிரித்தால்....
இசை 

அவள் 
ஓடினால்....
சூறாவளி

அந்த 
சோலையின் 
நறுமணச் 
சொந்தக்காரியை 

ஆலையின் 
புகையால் 
அழிக்காதீர்!

அந்த 
தூய்மைக்கு 
சொந்தக்காரியை 
சாக்கடையில் 
அமுக்காதீர்!



அவள் 
இல்லையேல் 
நீயும் இல்லை 
நானும் இல்லை 
இந்த உலகமும் இல்லை 

 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1