google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இறைவி-பேஸ்புக்,டுவிட்டர்கள் விமர்சனம்

Tuesday, June 7, 2016

இறைவி-பேஸ்புக்,டுவிட்டர்கள் விமர்சனம்



இறைவி சினிமாவும் வழக்கம் போல் சமூக வலைதளங்களில் இரு வேறுபட்ட விமர்சனங்களால் தள்ளாட்டம் போடுகிறது.....

சி.பி.செந்தில்குமார்@senthilcp

மாமூல் மசாலா ,ஆக்சன் பட ரசிகர்களுக்கு ஒரு வேளை படம் பிடிக்காமல் போகலாம்.ஆனால் தரமான படம் தான் #இறைவி

முகத்திரை@mugathirai

எடுத்துக் கொண்ட கதையில் இயக்குனர் எந்த சமரசமும் செய்யவில்லை. எல்லா கதாபாத்திரமும் அதன் இயல்பை இறுதி காட்சி வரை இழக்கவில்லை. #இறைவி

Jay Kumaar@Jaykumaar_

கொஞ்சம் வித்யாசமாண காம்ப்ளெக்ஸ் ஸ்க்ரீன்ப்ளே படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மிஸ் பண்ணமாட்டேன், ஆனா தமிழ்ல ரொம்ப ரேர் #இறைவி

கொராப்பு...@devanandkannan

ஆண் நெடில்... கூனி குருகி குறில் ஆகும் ஒர் தருணம் ... #இறைவி ஒரு லைன் விமர்சனம்

டெவிலிஸம்™@Kannamma_

நூறு பேர் படம் பாத்தா அதுல 70 பேர விமர்சனம் எழுத வச்சிருக்கு #இறைவி

RamKumar@ramk8059

#இறைவி படம் ஆன்லைன் விமர்சனம் படி பாத்தா நல்ல படம் வியாபார ரீதியில் பாத்தா ஒரு தோல்வி படம் :)

சிந்தனைவாதி @PARITHITAMIL
எல்லோரும் கோவணம் கட்டி இருந்தால்....
நாம் நிர்வாணமாக திரிய வேண்டும் அதுதான் விமர்சன தியரி
#இறைவி_விமர்சனம்  #சாரு

Vasantha Balan-fb
இறைவி பார்த்தேன்.மன சஞ்சலம் அடைந்தேன்.
எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு உயர்தர நடிப்பு
அவர் வசனம் உச்சரிக்கும் விதம்.அவரின் உடல்மொழி அல்பாசினோவோக்கு இணையானது.
மொத்த படத்தையும் தன் நடிப்பால் தோளில் சுமந்து செல்கிறார்.
உடன் நடிக்கும் அத்தனை நடிகர்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு தனியான டைனோசராக வலம் வருகிறார். எஸ் ஜே சூர்யா.சில நுண்ணிய இடங்களில் தோல்வியுற்ற சினிமா இயக்குனராய் அற்புதமான உடல்மொழியை வசனத்தை வாழ்ந்து நடித்திருக்கிறார்.தமிழ் சினிமாவின் அதி பிரமாதமான நடிகர்கள் வரிசையில் எஸ் ஜே சூர்யா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வைரவேல் மாரியப்பன் fb
ஏன் இன்னமும் அந்த இந்துமத
காவலர்கள் எதிர்க்காமல் இருக்கிறார்கள்...?
#இறைவி

Cinema ulagam fb


இறைவி பார்த்த அனைத்து ஆண்களும் ஓர் குற்ற உணர்ச்சியூடன் தான் திரையரங்கை விட்டு வெளியே வருவான், அந்த வகையில் இறைவி ஜெயித்துவிட்டாள்.

Elavarasan fb
இந்த படத்தை யார் யார் எல்லாம் நன்றாக இல்லை என்று கூறுகிறார்களோ அவர்கள் அனைவரும் விஜய் அஜீத் ரஜினி ரசிகர்கள்தான்

Sivaperumal  fb
இன்றைய சூழலில் வாழும் ஆண் மற்றும் பெண்களின் நிலை தான் இப்படம்...தரமில்லா படம் என்பது முட்டாள்தனம்...

ஆக மொத்தத்தில்...,,,

இது போன்ற விமர்சன மோதலுக்கு காரணம் தடி எடுத்தவன் எல்லாம் தம்புரான் ஆன கதையாக படம் பார்த்தவன் எல்லாம் விமர்சனம் எழுதும் நோய் வந்ததால் இருக்குமோ...?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1