google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மூஞ்சி புக்கு(FACEBOOK) கவிதைகள்

Wednesday, July 8, 2015

மூஞ்சி புக்கு(FACEBOOK) கவிதைகள்

சமுக வலைத்தளம் பேஸ் புக்கிலும் அருமையான குட்டிக் கவிதைகள் கண்டேன் அவைகளில் கவிதைக்கு உரிய சாரம்சங்கள்  இல்லை

அவைகள் எல்லாம்  காதல் ஜொள்ளுவிடும் கவிதைகள்  
சில ஜில்லுனு இருக்கும்  திகட்டாத தேன் துளிகள்
கொஞ்சமே   காரசாரமாய் சமுக சிந்தனையுடன் இருக்கும் கவிதைகள்


கள்ளம் கபடம் இல்லாத
குட்டிக் கடவுளின் முத்தம் .....(Parithi Muthurasan)

கேள்விக்குறியாக இருந்த என் வாழ்க்கை 
நீ வந்ததும் ஆச்சரிய குறியாக மாறிவிட்டதே....!!

நீ திறுத்த வருவாய் என்பதாலே 
தவறாக எழுதுகிறேன்....... (Murali Munus)



துடப்பக்கட்டை
தரையை முத்தமிடும் போது
தரை சுத்தமாகிறது
நீ முத்தமிடும் போது மட்டும்
ஏன் என் கன்னம் எச்சிலாகிறது

‪#‎சர்வதேசமுத்ததினம்‬....(Parithi Muthurasan)


ஸ்வீட்டாக ப்ரொப்போஸ் செய்வது எப்படி??
அன்பே ரஸகுல்லா,
லட்டு மாதிரி இருக்கும் கண்களில்,
ஜீரா தாங்கி நிற்கிறாய்,
உன் அண்ணன் ஜாங்கிரிவாயன் தடுத்தாலும்,
கண்டிப்பாய் உன்னுடன் ஸ்வீட் பூந்தியாய் கலப்பேன்..
எனக்கு மட்டும் நீ அல்வா கொடுத்துவிடாதே.......(
ரா புவன்)




ஓடி ஓடி பார்க்கனும்
நாடு நாடாய் ஓடனும்-
எதிர்க்கட்சிகாரங்க எல்லாம்
வயிறு எரிஞ்சி  சாகனும்.........பரிதி.முத்துராசன்

சாவைப் பார்த்து 
நான் பயப்படவில்லை 
என்னை கொல்வது நீயா இருந்தால்..!! ........(ரிஷி பாலா)

அடடா
ஒரு திருட்டு ரயிலும்
ஒரு சரக்கு ரயிலும்
மெட்ரோ ரயிலில் செல்கிறதே.......(பிரபு மாரியப்பன்


ஓவியா இல்லைனா காவியா.!
காவியாவும் இல்லைனா அழைவேன் ஆவியா .!......(நெல்லை ரமேஷ்)

நீ..
நான்...
மழை....
மட்டன் குழம்பு............(
சிவ சிவா)

அனுமதியின்றி
கேலரிக்குள் புகும்
வாட்ஸ்அப் புகைப்படத்தைப் போல
என்னுள் புகுந்துவிட்டாய் நீ !  ...............(
கட்டுமாவடி கவி கண்மணி)

அன்பே நீ என்ன முத்தூட் பைனான்ஸா
என் இதயத்தை அடகு பிடிக்கிறாய்..!..........(
மா.செ. பிரபாகரன்) 



மூஞ்சி பூரா எச்சிமுத்தமாக் குடுக்காளுவொகன்னமெல்லாம் எரிச்சவர்றவ போறவொஅல்லாரும் கிள்ளி கிள்ளிவெக்கிறாளுவொ #பபி
Posted by Parithi Muthurasan on Wednesday, July 8, 2015


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1