google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மகிழ்வோம் மகிழ்விப்போம்

Friday, March 20, 2015

மகிழ்வோம் மகிழ்விப்போம்

இன்று -மார்ச் 20 -சர்வதேச மகிழ்ச்சி தினம்
தமிழ் பதிவர்களே!
வாங்க வாங்க மகிழ்வோம்....
நம் அனுபவங்களை பதிவிட்டு
மற்றவர்களையும் மகிழ்விப்போம்
என் சிறுவயதில் நான் ஒலிபெருக்கியில் கேள்விப்பட்டு அனுபவித்த முதல் சிரிப்புச் சண்டை  இன்றும் மனதை விட்டு மறையவில்லை  ஒருவர் மற்றொருவரை போட்டு அடிப்பார் அப்போது அடிவாங்குபவர் "அடிப்பியா? அப்பன் மவனே சிங்கம்டா..."என்று வீராப்பு பேசி பேசியே அடிமேல் அடிவாங்கி அழுவார் 
அடிப்பவர்  நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்பதை பிற்பாடு தெரிந்து கொண்டு அவரது படங்கள் நிறைய பார்த்து மகிழ்ந்துள்ளேன்
ஒருபடத்தில் சிரிப்பு சிரிப்பு என்று சிரித்துக்கொண்டே பாடியபடி சிரிப்பில் பலவகைகளை வெளிப்படுத்துவார்

அதற்குப் பிறகு என் மனதில் இடம் பிடித்த அன்றைய சிரிப்பு நடிகர்கள்  டி.எஸ்.பாலையா,நாகேஷ்,சுருளிராஜன்,தேங்காய் சீனிவாசன் போன்றவர்களுடன் நடிகை மனோரமாவையும் மறக்க முடியாது

மதுரையில்  படித்த  காலத்தில் அன்றைய ரீகல் திரையரங்கில் ஆங்கில காமெடி நடிகர்கள் லாரல்-ஹார்டி,சார்லி சாப்ளின் போன்றவர்களின் படங்கள் வரும்போதெல்லாம் காத்துக்கிடந்து படம்பார்த்த நினைவு உண்டு



இடையில் நீண்ட காலமாக கவுண்டமணி-செந்தில்  காமெடிக்காகவே அவர்கள் நடித்த கொடூரமான அறுவைப்  படங்களுக்கும் போய் ரத்தம் சிந்தி அழுததும் உண்டு இன்றும் அவர்களது லொல்லு காமெடிக் காட்சிகள் அரசியல்,சமுதாய  நையாண்டிகளுக்கும் பயன்படுவதுண்டு  

விவேக்கின் நக்கலும் விக்கலுமான காமெடிகளை நிறைய படங்களில் ரசித்ததுண்டு வடிவேலுவின் ஆரம்பகால காமெடிகள் அட்டகாசமாக இருக்கும் 

பரோட்டா சூரி,கஞ்சா கருப்பு,சந்தானம் போன்றவர்கள் ஒன்றிரண்டு படங்களில் நம்மை சிரிக்க வைத்துவிட்டு......
 இப்போதெல்லாம் காமெடி என்ற பெயரில் நம்மை அடித்து துவைப்பவர்களே அதிகம் அதிலும் கதாநாயகர்களே மொக்கை போட்டு சாகடிக்கிறார்கள்

அதனால் சினிமாவுக்கு போய் துட்டு கொடுத்துவிட்டு டென்சனாகி வருவதைவிட  ட்விட்டர்கள்,பேஸ்புக் நண்பர்கள்,நம்ம பதிவர் நண்பர்கள்... இலவசாமாக நம்மைச் சிரிக்க வைப்பார்கள் 

இங்கே கொஞ்சம் சிரிக்க வைக்கும் ட்விட்டுகள்

✴ HBD Kuttyyy ✴ @Dinakar89 
ஒரு காப்பி எவ்வளவு சார்?
5 ரூபாய்
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய் . சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !

Sathish kumar@sathish0808 
காதல்ல தோத்தவன் கிட்ட போய் தாடி வைப்பது எப்படின்னு டிப்ஸ் கேட்க வேண்டியது!!! அப்புறம் அவன் காதை கடிச்சு வெச்சிட்டான்னு வந்து அழ வேண்டியது:/

நான் உன் நண்பன் @natpudanrajesh 
கிரெடிட்கார்டு கொடுக்குறவன் நம்மள "டியர் கஸ்டமர்" ன்னு சொல்லுவதன் தூய தமிழ் "டேய் கடன்காரா" என்பதே ஆகும்.

சண்டியர் @BoopatyMurugesh 
மீண்டும் இந்தியாவிடம் போய் அடிவாங்க இந்த உடம்பில் தெம்பில்லை..உங்கள் கைகளாலே எங்களை கொன்று விடுங்கள் கோப்பால்...


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1