google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நையாண்டி ட்விட்டுகள்

Saturday, March 7, 2015

நையாண்டி ட்விட்டுகள்

நகைச்சுவை இலக்கியத்தில் ஒருவகையான நையாண்டி (satire) என்பது சமுதாயம்,அரசியல்,சினிமா பிரபலங்களின் கூற்று....போன்றவைகளை சீர்திருத்தும் நோக்கில் கேலி செய்பவை

நையாண்டிகளில் பகடி,கிண்டல்...போன்று பல வகைகளில் பல வடிவங்களில் உண்டு இன்றைய காலகட்டத்தில் சமுக வலைத்தளமான ட்விட்டரில் வரும் நையாண்டி கீச்சுக்கள் ரொம்ப சக்தியானது


உளவாளி @withkaran 
டங்கா மாரி ஊதாரி..என் புருஷன் ஒரு நாதாரின்னு கிச்சன்ல இருந்து பாட்டுச்சத்தம் கேக்குது..#என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..

நையாண்டி நாரதர்@NaiyaandiNarath 
நடிகர்களை முதலவர் ஆக்கியது போதும்.
இனி ஒரு மருத்துவரை முதல்வர் ஆக்குங்கள்-அன்புமணி 
# அவ்ளோ தானா இல்ல? அந்த நர்ஸ் அக்காவை மினிஸ்டர் ஆக்கனுமா?
எமகாதகன்!!!் @Aathithamilan 
மகன்சினிமாவிற்கு பேனர் வைக்கக்கூடாது -கேப்டன் 
#நல்லவேள தலைவரே வேணாம்னுசொன்னீங்க 
அவ்ளோபெரியபேனரை எப்டிவைக்றதுனு முழிச்சிட்டிருந்தோம்
கோவை கமல்@KOVAI_KAMAL 
அதென்ன கையிலெ காலிலே ஆணிகளை அடிச்சுக்கிறது? கழுத்துலே,நெஞ்சிலெ அப்புறம்....அடிச்சுக்க வேண்டியது தானே! # ட்வீட் லைக் கவுண்டமணி!
கவிஞர் மீனவன் @barathgoldfish 
காலியான மது பாட்டில் சொல்லுது ! 
இன்று உன்னால் நான் காலி 
 நாளை என்னால் நீ காலி

Lakshmanan.P@laksh_kgm 
சட்டத்தின் முன்னாலே எல்லோரும் சமம்தானே என்று சொல்லி ஆடு,கோழி,காடை,கவுதாரி எல்லாம் கேவிக் கேவி அழுவுது, என்னோட கனவுல...

இளைய நிலா @ValarNilavu 
கனவில்.. ஊசி போட வந்த டாக்டர் 
கால் தடுக்கி குப்புற விழுந்து இருக்கலாம் :)) 


யுகராஜேஸ்@yugarajesh2 
அதிமுக ஆட்சியில் மகளிர்க்கு பாதுக்காப்பில்லை-கருணாநிதி
#ஆமா தலைவரே! அந்த அம்மாவையே புடிச்சு உள்ள போட்டாங்கனா பாருங்களே.
பொன் குழந்தை@ponkulanthai 
பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை இயந்திரம் செய்கிறது 
பெண்கள் இயந்திரங்களுக்கு வேலை செய்கிறார்கள் 
உடற்பயிற்சி மையத்தில்!!

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1