google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சிரிச்சா போச்சு (காமெடி ட்விட்கள்)

Thursday, March 5, 2015

சிரிச்சா போச்சு (காமெடி ட்விட்கள்)

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்பார்கள் அது உண்மையா? பொய்யா? தெரியாது அதுக்காக நோய் இருக்கிறவங்க மட்டும்தான் சிரிக்கனுமா? அல்லது சிரிக்கிறவங்க எல்லோரும் நோய் உள்ளவங்களா...?

ஆனால்  இந்த ட்விட்டர்களின் சமுதாயம், அரசியல், பற்றிய நையாண்டி,நகைச்சுவை காமெடி கீச்சுக்களை படித்தால்  உங்களை விட்டு எதுவும் போகாது உங்களுக்கு புதுசா ஒரு நோய்வரும்......சிரிப்பு நோய் 

இதை முழுக்க படிச்சப் பிறகு நீங்களே தெரிந்து கொள்வீர்கள் 


                          ஹேப்பி கோழி (HOLY)  மக்களே  பாலா @bala_ayan

பெருங்காயம்™ @Perungayam 
ராக்கெட் கண்டுபிடிச்ச விஞ்ஞானி கூட அமைதியா இருக்கான்.. 
ஒரே ஒரு டேபிள் மேட்ட கண்டுபிடிச்சுட்டு 
இவனுங்க பண்ற அலும்பு இருக்கே.. ஐயோயோயோ…

நாச்சியார் @npgeetha 
'எம்பு எங்க போறீங்க, எங்க போறீங்க'ன்னு 
எறும்பு பின்னாடியே போய்க் கேட்டு அதைப்படுத்தி, 
அது பேசலைன்னு என்கிட்ட புகார் வேற.lol :)) #மகளதிகாரம்

BabyPriya @urs_priya 
ஒரு கன்னத்தில் அறைந்தேன்...
மறு கன்னத்தில் வந்தமர்ந்தது கொசு

சுபாஷ் @su_boss2 
சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் வெச்சவன் 
வரிகூட கட்டமாட்டான்.அவனை விட்ருங்க.
ஸ்டேட் பேங்க்ல அக்கவுண்ட் வெச்சவன்கிட்ட வந்து 
இருபது இருபதா புடுங்குங்க

ℳr.வண்டு முருகன் © @Mr_vandu 
நல்லா தூங்கிட்டு இருக்கறவங்கள எழுப்பி 
என்னை பத்தி என்ன நினைக்கிறேனு கேட்டு பாருங்க,
நம்ம மரியாதை எப்படி காத்துல பறக்குதுனு அப்ப தெரியும்.

விவிகா சுரேஷ் ® @vivika_suresh 
'சாப்பிடும்போது பேசக்கூடாது'னு 
சரியா சமைக்க தெரியாத பொண்ணுதான் 
முதன்முதலா சொல்லியிருக்கும்

கில்லர் @paidkiller 
இவனும் இவன் மூஞ்சியும் த்தூ என்பதை 
அண்ணா என அழகியல் உணர்வோடு வெளிப்படுத்துகிறார்கள் 
நம் பெண்கள்!

ஆஸ்திரேலிய புத்தன் @ManiBE5 
இந்த ஹிந்திக்காரனுக நம்ம ஊர்ல வந்து 
அடகுகடை வைக்கிறானுங்க அணுஉலை வைக்கிறானுங்க..
எக்ஸ்ட்ரா ஒரு பானிப்பூரி கேட்டா வைக்க மாட்றானுங்க..

சில்லுண்டி| @iindran 
தட்டு கழுவ சோம்பேறிபட்ட ஏதோவொரு கெழவிதான், 
’புருஷன் சாப்ட்ட எச்சில் தட்டுல பொண்டாட்டி சாப்டனும்’னு கெளப்பி விட்டுருக்கனும் !

எமகாதகன்!!!்@Aathithamilan 
மோடி அவர்கள்பேசுவதை தமிழில் ட்ரேன்ஸ்லேசன்செய்வார் மயில்சாமிஅவர்கள் 
மோடி: பாரத் மாதா கி ஜே 
மயில்: பாரத பிரதமர் அம்மா ஜெ அவர்களே!!!

உடன்பிறப்பே @udanpirappe 
ரிசர்வ் பேங்க் அறிவிக்கும் முன்பே 
பிச்சைக்காரர்கள் சங்கம் ,இந்தந்த காசுகள் செல்லாதென அறிவித்து விடுகின்றன

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
தி.மு.க.வை அழித்துவிடலாம் என எவனும் கனவு காண தேவையில்லை: கருணாநிதி# 
அழகிரி அண்ணே! உங்க கிட்டே அப்பா ஏதோ பர்சனலா திட்டனுமாம்


உளவாளி @withkaran 
மோடி மாதிரி அனைவரும் முன்னுக்கு வர வேண்டும்.-தமிழிசை #போட்டோக்கு போஸ் கொடுக்கும்போது தானே..

⇝அதாரு அருண்⇜ @AArunrangiem 
என் வலதுபக்கம் அம்மா வாழ்க சுவரொட்டி 
என் இடதுபக்கம் அய்யா வாழ்க சுவரொட்டி 
என் வாழ்கையோ கழிவறை 'சுவரையொட்டி'

செந்தில் G @senthilgs81 
கோமியத்துக்கு காப்பிரைட் வாங்குறோம் 
லிட்டர் லிட்டரா விக்கிறோம் 
கூடிய சீக்கிரமா வல்லரசு ஆகுறோம்.

பங்காளி @ckcbe 
இந்த உலகத்துல பணமில்லாதவன ஈசியா கண்டுபுடிச்சிரலாம்.. 
நீதி நேர்மை நியாயம்னு பேசிட்டிருப்பான்

                        குறிஞ்சிப் பூ@glonas7472
 ·
பணம் இருக்கிறவன் செத்தா இறுதி யாத்திரை 
பணமில்லாதவன் செத்தா சவ ஊர்வலம்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1