google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: டமால் டுமீல் பகீர் ட்விட்டுகள்

Saturday, February 28, 2015

டமால் டுமீல் பகீர் ட்விட்டுகள்


நகைப்பூட்டி நையாண்டி செய்யும் இவைகள் படிப்போரை புரட்டிப் போடும் நெம்புகோல் ட்விட்டுகள் சில உங்களை சிரிக்க வைக்கும் சில உங்களை சிந்திக்க வைக்கும் ஆனால் எல்லாமே அனுகுண்டு வெடிப்பதுபோல் உங்களுக்குள் ஓர் அதிர்வலையை உண்டாக்கும்..... டமால் டுமீல் பகீர் ட்விட்கள் 

மீனம்மா @meenammakayal 
வீடெங்கும் உறவினர் கூட்டம் 
மனைவி கதறி அழுவாள் 
குழந்தை நீ இறந்தது தெரியாமல் உன்னை எழுப்பும் 
அதுவரை நன்றாக புகைத்துக்கொள்

கருணை மலர் @karunaiimalar 
திருவள்ளுவர் இரண்டுஅடியில் வாழ்க்கையை புரிய வைக்க நினைத்தார் ஆனால் நாம் இங்கு பலஅடிகள் பட்டுத்தான் வாழ்க்கையை புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றோம்

நாட்டுப்புறத்தான்@naatupurathan 
மழையில் நடப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்; 
என் கண்ணீர் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பதால்...!!! -சாப்ளின்!

san* @SydLittleRome 
நடு ரோட்டுல கிடக்குற கல்லு வண்டில போறப்ப இடிக்குதுனு போட்டோ எடுத்து பேஸ்புக்ல போடறானுங்க.
ஆனா அத எடுத்து ஒரமா போடமாட்றானுங்க.

தமிழ்ப்பறவை @Tparavai 
ஆயிரம் ரூபா நோட்டுதானடா கொடுத்தேன்.
அதுக்கேன் கள்ளநோட்டு அடிக்கிறவனைப் பாக்குறமாதிரி 
லுக்கு விடுறீங்க???!!!!

வசுந்தரா காமேஷ் @kaamvas 
தனது ஜாதகம், தகுதி எல்லாம் கொடுத்து 
யாரையோ ஆண்/பெண் தேடசொல்லிவிட்டு, 
ஆன்லைனில் செருப்பை தேடித்தேடி 
ஆசையாய் வாங்குகிறார்கள் பலர். முரண்.

ரா குமார் @Raaa_kumar 
அடக்கம் ட்வீடரில் எழுதப்படும் 
அடங்காமை , பேஸ்புக்கில் எழுத படும் / குறள் எண் - 1331 .

|\ பாண்டியன் /|\@catchpandian1 
இறைவா... 
ஆறுதல் சொல்ல எவரும் தேவையில்லாத அளவுக்கு 
எனக்கு துன்பத்தைக் கொடு 
இல்லையேல், ஆறுதல் சொல்பவர் 
உன் இடத்தைப் பிடித்து விடுவார்.

Guru @g_for_Guru 
என்ன வேலை பண்றீங்க? 
BJP கவர்மெண்ட்க்கு ஒத்தாசையா இருக்கேன். 
BJP கவர்மெண்ட் என்ன பண்ணுது? 
சும்மா தான் இருக்குது.

Dr.எட்டு @8appan 
கதவ கேரக்டர் சாத்துனா"சாதாபடம்" 
கதவு அதுவா சாத்திக்கிட்டா"பேய்படம்," 
கதவ வில்லன் சாத்துனா"ரேப்சீன் " 
கதவ ஹீரோ சாத்துனா "1st night" தமிழ்திரை

லியோ @leogladyy 
400ரூ-க்கு கிரடிட் கார்டுல கடன் சொல்லி சாப்பிடுறவன விட, 
40ரூ-க்கு தள்ளுவண்டி கடையில காச குடுத்துட்டு சாப்பிடறவன் நிஜமான பணக்காரன்.

Ethir Katchi @sudhanks 
வீட்ல தகராறுனா நீங்களே பேசி முடிங்க, 
இல்லனா வெஷத்த வாங்கி குடிச்சி சாவுங்க, 
 அதவுட்டுட்டு 'சொல்வதெல்லாம் உண்மை' பக்கம் போய் சாகாதீங்க!!

சண்டியர் @BoopatyMurugesh 
கூட இருக்கவங்க ஐபோன் வாங்குனா 
நாமளும் ஐபோன் தான் வாங்கனும்ன்னு அவசியமில்ல,
இப்படி எட்டணா ஸ்டிக்கர் வாங்கி ஒட்டிக்கலாம் 

மிருதுளா @mrithulaM 
'கல்யாணம் ஆகல'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க,'கல்யாணம் ஆயிடுச்சு'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1