google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி-ட்விட்டர்கள் பார்வையில்...

Wednesday, February 11, 2015

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி-ட்விட்டர்கள் பார்வையில்...

மீண்டும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் அமர்கிறது டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி அரசியல் பூகம்பமாக பார்க்கின்றன வலைதளங்களும் நாளேடுகளும்.....

ஆம் ஆத்மியின் எழுச்சியை இந்திய ஜனநாயகத்தில் படித்த அரசியல்வாதிகளுக்கும் படிக்காத அரசியல்வாதிகளுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் யுத்தமாக கவனிக்கப்படுகிறது

இதுவரை டெல்லியை ஆண்ட காங்கிரஸ் கட்சியை சுத்தமாக துடைத்துவிட்டது ஆம் ஆத்மியின் விளக்குமாறு அதேநேரம் இன்று இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் பாஜகவினருக்கு மோடி அலை ஓய்ந்தது என்று மக்களின் எச்சரிக்கையாக.....

ட்விட்டர்கள் பார்வையில்...
நாகசோதி நாகமணி @nagajothin 
ஆம் ஆத்மி கட்சிக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது! - செய்தி~! இந்தா கிளம்பிட்டான்கள்ள,, ஆப் கீ பார் வெளக்கமாறு சர்க்கார்~!!

வி.ஐ.பி@munisankar1 
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றினர் ஆம்ஆத்மி -தமிழிசை. இந்த பாப்பா அரசியலுக்கு புதுசா, சமாளிக்கவே தெரில.

ஏகலைவன்☺@Eakalaivan 
தில்லியில் "ஆம் ஆத்மி" வென்றது என்பதை விட, "பா.ஜ.க." தோற்றது என்பது தான் மிகச் சரி.

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
கடலின் மையத்தில் அதிர்வு ஏற்பட்டா அது சுனாமி ! நாட்டின் மையத்தில் அதிர்வு ஏற்படுத்துனா அது ஆம் ஆத்மி # டெல்லி கில்லி
ansari masthan@ansari_masthan 
என்ன நினைத்து டில்லி மக்கள் ஆம்ஆத்மி க்கு ஓட்டு போட்டாங்கனு தெரியலை -தமிழிசை # போன ட்ரிப் எது நினைத்து உங்களுக்கு போட்டாங்களோ அதையே தான் ,,

திருச்சி மன்னாரு@TrichyMannaru 
கிரன் பேடி அரவிந்த் கேஜ்ரிவாலிடம் ஃபோனில்: என்ன ஜி நம்ம ப்ளான் வொர்க் அவுட் ஆயிடுச்சு போல. மறுபடியும் எப்ப நான் நம்ம கட்சில சேரட்டும்?

சுந்தரபாண்டியன்@twitvimal 
அரவிந்த் கெஜ்ரிய லூசுன்னு வசைப்பேசுன்னு எத்தனு பக்கிங்க நாளைக்கு அந்த ஆள் வீட்டு வாசல்ல நீக்கபோகுதுன்னு தெரில!!

ஆழ்வார்க்கடியான்@veerublr 
ஆம் ஆத்மிக்கு எல்லாரும் மரியாத பண்ணியாச்சா. இன்னும் ஏதாவது மதசார்பின்மைவாதிகள் இண்டு, இடுக்குல ஒழிஞ்சிட்டு இருந்தா வந்துசீக்கிரம் பண்ணிருங்க

Ajith Pandi @Ajithpandi 
மறுபடியும் டெல்லியில் ஆம் ஆத்மி.. தேட் கோட்டெல்லாம் அழிங்க நான் மொதல்ல இருந்து சாப்பிடுறேன் மொமண்ட்


உழவே தலை@ThanjaiSabari 
அநியாயத்த தட்டிக் கேட்க ஆண்டவன் நேரடியா வரமாட்டான் எப்போதும்., அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரியான ஆளுங்கள அனுப்பி வைப்பான்…



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1