google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்துவது சரியா? தவறா?

Sunday, August 31, 2014

மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்துவது சரியா? தவறா?


நன்றாக படிக்க வைப்பதில் எத்தனையோ வழிமுறைகள் இருக்க ஓர் ஆசிரியர் மாணவனை  அடிப்பதும்,திட்டுவதும்  சரியான வழிமுறை அல்ல என்றும் இனி ஆசிரியர் மாணவனை துன்புறுத்தக் கூடாது என்று  அரசு அறிவித்திருப்பது.....

நானும் BEd ஆசிரியர் படிப்பு படித்தவன் என்பதால் அனுபவரீதியாக இந்தப் பதிவை எழுதுகிறேன் BEd ஆசிரியர் பயிற்சி படிப்பில் பல உளவியல் அறிஞர்களின் கல்வி முறை போதிக்கப்படுகிறது உளவியல் ஞானிகள் பிராய்ட் முதற்கொண்டு பலரும்  ஊக்கப்பரிசு மூலமே உண்மையான பயிற்சி அளிக்கமுடியும் என்பதை வற்புறுத்துவார்கள்

ஒரு கிளி ஜோசியர் தான் பழக்கப்படுத்தியுள்ள  கிளி அதிஷ்ட அட்டையை எடுக்கும் ஒவ்வொரு முறையும் அதற்கு சன்மானமாக ஒரு நெல்மணியை கொடுப்பார் அதே கிளியை அவர் அடித்தோ திட்டியோ அட்டையை எடுக்கச் சொல்வார் எனில் அந்தக் கிளி கிலிபிடித்து மாயும்

நான் 5-ஆம் வகுப்பு படிக்கும் போது எனது பள்ளி ஆசிரியர் ஒருவர் அவ்வப்போது தனது கால் விரலில் கட்டு போட்டுக் கொண்டு வகுப்பறைக்கு வருவார் அவர் கால் விரலில் வலிக்கும் போதெல்லாம் அடக்கமுடியாத கோபத்தில் இருக்கும் அவர் தவறு செய்யும் மாணவர்களை அடித்து துன்புறுத்துவார் சில நேரம் தவறு செய்யாத மாணவர்களுக்கும் தண்டனை கிடைக்கும்......அவர் காலில் கட்டு போட்டு வகுப்புக்கு வந்தாலே அனைத்து மாணவர்களுக்கும் பயத்தில் அடிவயிறு கலங்கும்

 எங்கள் உயர் நிலை அரசு பள்ளியில் குடி நீர் குடிக்க பள்ளிக் கிணறுக்குத்தான் அனைவரும் செல்லவேண்டும்    இடைவேளை நேரத்தில் மாணவர்கள் கிணற்றுக்கு பாயிந்து சென்று அதில் உள்ள ஒரேயொரு வாளியை பிடிப்பதில் போட்டி நடக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் போது நானும் என் வகுப்பு தோழர்கள் இருவரும் முதலில் சென்று வாளியை பிடிப்பதில் எங்கள் வகுப்பு இன்னொரு மாணவனிடம் தகராறு ஏற்பட்டுவிட்டது அவனோ எங்கள் பள்ளி தமிழாசிரியர் மகன் மீண்டும் வகுப்புக்கு வந்தபோது அவனை நாங்கள் அடித்துவிட்டதாக அழுதுகொண்டு எங்கள் வகுப்பு வாத்தியாரிடம் புகார் அளிக்க....

அந்த ஆசிரியரோ எங்கள் மீது தவறு இல்லை என்ற போதிலும் சக ஆசிரியர் மகனின் புகார் என்பதால் எங்கள் மூவரையும் இரண்டு கைகளையும் பின்புறம் தெரிய நீட்ட வைத்து அடி பின்னிவிட்டார் அப்போது வலி உயிர் போகும் அளவுக்கு இருந்தது  வீக்கம் பல நாள் இருந்தது

கல்லூரி படிக்கும் போது சில  ஆசிரியர்கள்  மத உணர்வுடனும் இன்னும் சிலர் சாதி உணர்வுடனும் என்னிடம் நடந்து கொண்டதை அறிந்துள்ளேன் அவர்கள் பார்வையும் பேச்சும் வக்கிரமாக இருக்கும்

இப்படி ஆசிரியர்கள் ஆகச்....சிரியோராய் நடந்துகொண்ட நிகழ்சிகள் என் பள்ளி கல்லூரி வாழ்வில் பல கண்டுள்ளேன் இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கும் நிறைய இருக்கும்

அதேநேரம் ஆசிரியராய் இருப்பவர்களுக்கு பல சங்கடங்கள் உள்ளது மாணவர்களை சரியான முறையில் படிக்கவைத்து இறுதித் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற செய்து பள்ளிக்கும் நல்ல பெயர் கிடைக்கச் செய்யவேண்டும்

அரசு பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறையுமானால் அதற்கும் ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவார்கள்

இன்னும் நான் BEd படிக்கும் போது ஒரு மாத காலம் ஒரு பள்ளியில் பயிற்சி ஆசிரியராய் இருக்கவேண்டும் அப்படி இருந்த போது கண்ட அனுபவம் ரொம்ப வேடிக்கையானது  என்னை கலாய்ச்சி பாடாய் படுத்திவிட்டார்கள்அப்போது அங்கே ஆசிரியராய் இருப்பவர்கள் நிலைமையை எண்ணி வருத்தப்பட்டேன் எனக்கு ஆசிரியர் வேலைக்குச் செல்லவும்  இல்லை நான் ஆசிரியருக்கு படித்ததையும் யாரிடமும் சொல்வதும் இல்லை

அன்றைய குருகுலம் போன்று இன்று ஆசிரியருக்கு மரியாதையும் இல்லை மாணவர்களும் ஆசிரியர்களுக்கு  பணிவு காட்டுவதில்லை இந்த நல்ல காரியத்தை செய்ததில் இந்தக் கால சினிமாக்களுக்கும் பங்கு உண்டு


இப்படியிருக்க............
மாணவர்களை ஆசிரியர்கள் திட்டவோ,அடிக்கவோ கூடாது என்று அரசு பரிந்துரை செய்திருப்பது................




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........

ட்விட்டரில் ............

மதில்««MALE»»பூனை@ponram1234
சரக்கு அடித்துவிட்டு "உற்சாகமாக" பாடம் நடத்திய கூவத்தனூர் அரசுநடுநிலைப்பள்ளி ஆசிரியர் பிரகாஷ் சஸ்பெண்ட்.

Maalaimalar.com@maalaimalar 
ஆபாசப் படங்களை காட்டி, பலாத்காரம்: 13 வயது சிறுமி தற்கொலை முயற்சி - ஆசிரியர் கைது...



மதில்««MALE»»பூனை@ponram1234 
வீட்டுப் பாடம் எழுதாத மாணவனை "67" முறை அடித்த ஆசிரியர் டிஸ்மிஸ் #உ.பி

விவிகா சுரேஷ் ®@vivika_suresh 
மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்! #அப்படியே 'காபி டீ' வாங்கிவர சொல்லக் கூடாதுனும் அறிவுறுத்திடுங்க

மர்ஹபா™ (வலி Jee)@coolguyvali 
மாணவரை துன்புறுத்தினால் ஆசிரியர் மீது நடவடிக்கை # நாங்க படிக்குறப்போ எங்கேடா இருந்தீங்க நீங்க எல்லாம்???

நாட்டி நாரதர்®@mpgiri 
மாணவரை துன்புறுத்தினால் ஆசிரியர் மீது நடவடிக்கை #நல்லவேளை என் பையனுக்கு பேப்பர் படிக்க தெரியாது. இல்லேன்னா ஸ்கூலை ஒரு வழி பண்ணிருவான்

ஒற்றன்@pmkproxy 
ஆசிரியரிடம் அடி வாங்கிய கடைசி தலைமுறையும் நானே.... ஆசிரியர் குத்தி கொலை

பட்டதாரி@sathish381277 
'ஹோம் ஒர்க்' செய்யாததற்காக6வயது சிறுவனை இரும்பு 'ஸ்கேலால்அடித்த ஆசிரியை இதையேஆண் ஆசிரியர் செஞ்சிருந்தா அவருக்குஓம் வொர்க் நடந்திருக்கும்

Yoda@iamVariable 
ஆசிரியர் உள்ளேவரும்போது மாணவர்கள்சிரிக்கிறார்கள் ஏண்டா சிரிக்கிறீங்க நீங்கதானசார் துன்பம் வரும்போது சிரிக்கசொன்னீங்க இடுக்கண் வருங்கால் நகுக

Oneindia Tamil@thatsTamil 
பிறக்கும் முன்பே 'பி.எட்.' பட்டம் வாங்கிய ஆசிரியர்கள்: இந்த கூத்து பீகாரில்...

  கணேசன்@Railganesan 
மாதாந்திர தேர்வில் அறிவியலில் 90 மதிப்பெண் எடுக்கும் அனைவருக்கும் அறிவியல் ஆசிரியரின் பேனா அன்பளிப்பு 

Yoda@iamVariable 
ஆசிரியரும் தெய்வமும் ஒன்னு தெரியுமாடா ? தெரியும் சார். எப்டி ? ரெண்டும் நின்னு கொல்லும் !

கணேசன்@Railganesan 
மாணவர்களை திட்டவோ , அடிக்கவோ கூடாது என்று சொல்லும் அரசு தேர்ச்சி சதவீதம் குறையும் போது ஆசிரியர்களுக்கு மட்டும் தண்டனை தருவது நியாயமாகுமா ?


இதை நான் நகைச்சுவையாக கூகுள் பிளஸில் பதிவிட்டபோது பதிவர் நண்பர்  வழிப்போக்கன் அவர்கள் அவரது பள்ளிக்கூட  அனுபவத்தை எழுதியிருந்தார்..........http://valipokken.blogspot.com/2013/06/blog-post_20.html



நீங்களும் உங்கள் அனுபவத்தை கருத்துப் பெட்டியில் எழுதி மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்  



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1