google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கேரளா போன்று தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமா?

Monday, August 25, 2014

கேரளா போன்று தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமா?

இந்தியாவிலேயே அதிகமாக மது அருந்தும் மாநிலமான கேரளாவில் 700 மது பான பார்கள் மூடப்பட்டு...படிப்படியாக பூரண மதுவிலக்கு அமுல் படுத்தப்படும் என்று முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார் 

இது போன்று தமிழ்நாட்டிலும் அரசு வருமானம் பெரிதல்ல மக்கள் நலனே முக்கியம் என்று பூரண மதுவிலக்கு வருமா....?

இந்த ஆண்டு மட்டும் டாஸ்மாக் நிறுவனத்தின் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி வருமானம் வந்துள்ளதால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார் 

ஆனால் 
அதிமுக அரசு மீது பொறாமைகொண்ட அரசியல் கட்சிகள் சில...

கேரளாவில் முதலில் 318 மதுப்பார்கள் மூடத் துவங்கிய போதே அங்கு படிப் படியாக 15 விழுக்காடு குற்றச்செயல்களும் 10 விழுக்காடு வாகன விபத்துக்களும் குறைய ஆரம்பித்தன அதைப் பின்பற்றி தமிழகத்திலும் மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் கேட்டுள்ளார் 

மதுவின் கொடுமையால் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார் 

இப்போது கேரளாவில் மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை  என்றால் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்டு மது  விற்பனை அதிகரிக்கும் அரசு கஜானா நிறையும் அதைவைத்து இன்னும் நிறைய மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் 

இங்கே மதுவிலக்கு அமுல் படுத்தினால் கள்ளச் சாராயம் விற்பனை அதிகரிக்கும் அதனால் மக்கள் உயிர் பலி ஏற்படும்  எனவே மக்கள் நலனில் அக்கறை கொண்ட அதிமுக அரசு நல்ல தரமான வெளிநாட்டு மது பாட்டில்களை விற்பனை செய்து அரசு வருமானத்தையும் பெருக்கி மக்கள் உயிர் பலியையும் தடுத்து வரும் 2016 தேர்தலில் வெற்றி பெற குடி மகன்கள் வாழ்த்துகிறார்கள்  

எனவே கேரளா போன்று தமிழ் நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று.........

கருத்துக்கணிப்பு இல்லாமலே உடனடி தீர்ப்பு வழங்கப்படுகிறது 


பதிவரே! தீர்ப்பை மாற்று.......இங்கேயும் போராட்டம் ஆரம்பமாகிவிட்டது 
சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  மதுக்கடைக்கு அஞ்சலி  செய்தார்கள் 

மதுரையில் பெண்கள் போராட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் 

அய்யோ....மக்கா எல்லாம் போட்டாவுக்கு போஸ் கொடுக்கிற கூட்டம் ஆங் .....அம்மா நினைக்காமல் இங்கே எதுவும் சாத்தியமில்லை 

சரி....என்னமோ மாதவா 
நாட்டுல நடக்குறது எதுவும் புரியலையா....?


இங்க வந்ததுக்கு இதையாவது ரசிச்சிட்டு போங்க............

 





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1