google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: விலையேற்றம் நாட்டின் முன்னேற்றம்...?

Tuesday, August 19, 2014

விலையேற்றம் நாட்டின் முன்னேற்றம்...?

ஒரு நாட்டில் உள்ள விலைவாசி உயர்வு அந்நாட்டின் முன்னேற்றத்தை காட்டுகிறது  உண்மையில் ஊதிய உயர்வுடன் விலைவாசி உயர்வும் தேவையான ஓன்று

1995-ஆம் ஆண்டு நான் ஐரோப்பிய நாடுகளில் பயணித்த போது அங்கே உள்ள பொருட்களின் விலையை கேட்டு அன்று என் தலை சுற்றியது  


பாரீஸ் நகரத்தில் ஒரு கிப்ட் ஷாப்பில் நமது சென்னையில் கிடைத்த பத்து ரூபாய் ரெயினால்ட் பேனாவின் விலை  அப்போது அங்கே பத்து பிராங் (ஒரு பிராங்=பத்து ரூபாய்) அதாவது நூறு ரூபாய்......

இப்படித்தான் அத்தியாவசிய பொருட்கள் விலை பயம்காட்டியது அப்போது விமான நிலையத்தில் இருந்த ஒரு பல்பொருள் விற்பனை செய்யும் டிபார்ட்மென்ட் ஷாப்பில் சில பொருட்களை வாங்கிவிட்டு அங்கே இருந்த ஒரே ஒரு பெண்மணியிடம் நீங்கள் உரிமையாளரா...? என்று கேட்டபோது....

அந்த  அம்மணியோ..இல்லை தான் ஒரு வேலை ஆள் என்று சொன்னபோது ஆச்சரியப்பட்டேன் அந்த அம்மணியின் சம்பளம் எவ்வளவு...? என்று கேட்டேன் 

கொஞ்சம் தயங்கிய அந்தப் பெண்மணி மாதம் ஆறு ஆயிரம் பிராங் என்று சொன்னார்கள் அதாவது அறுபது ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் 

அப்படியே அவர்களுடன் சற்று பேசிய போது தெரிந்து கொண்டேன் அவர்கள் தங்கும் வீட்டுக்கு மாதம் முப்பது ஆயிரம் மேல் செலவு ஆவதாகவும் மற்ற செலவுகளுக்கு போக அந்த அம்மணியின் நிலைமை அடடா....வறுமை...

அதே நிலைதான் அப்போது நான் லண்டன் மாநகர் சென்ற போதும் உணர்ந்தேன்

அன்றைய காலகட்டத்தில் நான் எனது நிறுவனத்தில் மாதம் ரூபாய்  மூவாயிரம் சம்பளமாக வாங்கிக்கொண்டு சென்னையில் ஆயிரத்து இரு நூறு வாடகை வீட்டில் குடியிருந்தேன் 
ஒப்பிட்டுப் பார்த்தால் சென்னையில் நான் வாங்கிய சம்பளமும் பாரிஸ் நகரில் ஒரு பெண்மணி வாங்கிய சம்பளமும் தொகையில் வேறு பட்டாலும் இரண்டும் ஒன்றுதான்

எனவே  ஒரு நாட்டின் விலைவாசி உயர்வு அந்நாட்டு மக்களின் வருமானத்தை கணக்கில் கொண்டு இருக்குமேயானால்........விலையேற்றம் அந்நாட்டின் முன்னேற்றமே 


யோவ்....பதிவரே நீ பெரிய பொருளாதார மேதை மாதிரி சொல்வது ஒன்றும் புரியவில்லை என்று நினைத்தால்..........

நீங்கள் சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை கருத்துப் பெட்டியில்........
ஒரு  நாட்டில் விலையேற்றம் அந்நாட்டின் முன்னேற்றத்தை குறிக்கிறதா....?


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1