google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை எப்படியிருக்கு?

Friday, August 15, 2014

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை எப்படியிருக்கு?


பிரதமர் மோடியின் முதல் சுதந்திர தின உரை இதுவரை இல்லாத அளவுக்கு ஆப்பிரகாம் லிங்கன் பேச்சுடன் ஒப்பிடப்பட்டு ஒளிமயமான இந்தியாவிற்கு நம்பிக்கையும் உத்வேகமும்  ஊட்டுவதாக உள்ளது 

இந்தியாவின் 68-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை நம்பிக்கை நிறைந்ததாக ஊக்கம் ஊட்டுவதாக உள்ளது என்று அனைத்து ஊடகங்களும் அரசியல் வல்லுனர்களும் பாராட்டுகிறார்கள் 

#பிரதமர் உரையில் உறுதி
அனைவரும் நாட்டிற்காக எவ்வளவு நேரம் உழைக்கிறார்களோ, அதை விட நான் ஒரு மணி நேரம் கூடுதலாக உழைப்பேன்; நான் முதல் சேவகன்

#பிரதமர் உரையில் நம்பிக்கை
விவேகானந்தர் கூறியது போல நாம் தான் "உலகத்துக்கே வழிகாட்டும் குரு"வாக திகழ்வோம்

#பிரதமர் உரையில் சூளுரை
எந்த ஆயுதமும் இல்லாமல் ஒற்றுமையுடன் போராடி மாபெரும் அரசாங்கத்தை விரட்டியவர்கள் நாம்; அதே போல வறுமையை விரட்டுவோம்

#பிரதமர் உரையில் வேதனை
இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளிக்கு செல்லும் கீழான நிலையில் தான் இன்னும் இருக்கிறோம். அதை மாற்றுவது தான் கடினமான வேலை

#பிரதமர் உரையில் கவலை
அனைத்து தரப்பு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தநமக்குள்ள ஒரு தடை ஒழுக்கமின்மை 

#பிரதமர் உரையில் கனவு
நம் இளைஞர்கள் கணினித் துறையில் இந்தியாவுக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஏற்படுத்த வேண்டியது "Digital India"

#பிரதமர் உரையில் அறைகூவல்
வேலை வாய்ப்பை உருவாக்க, உற்பத்தியைப் பெருக்க, "இந்தியாவில் தயாரியுங்கள்; எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யுங்கள்

#பிரதமர் உரையில் பெண்ணின் பெருமை
காமன் வெல்த் போட்டிகளில் நாம் பெற்ற 64 பதக்கங்களில் 29 பதக்கம் பெண்களால் வெல்லப்பட்டது  

#பிரதமர் உரையில் உருக்கம்
1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற சமநிலையற்ற சமுதாயம் இந்தியாவில் உள்ளது. பெண் சிசுக் கொலைகளை யாரும் செய்ய வேண்டாம்

#பிரதமர் உரையில் அறிவுரை
ஆண் பிள்ளைகளை ஒழுக்கமுடன் வளர்ப்பது தான் கற்பழிப்பை குறைக்கும்

இன்னும் பல சிறப்பான விளக்கம்,அறிவுரை தந்து நான் உங்கள் முன்னால் பிரதம மந்திரியாக அல்ல; பிரதம சேவகனாக நிற்கிறேன் என்று தன்னடக்கமாக உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி 

அதேநேரம்  காங்கிரஸ் மோடியின் பேச்சில் எந்த புதிய கருத்துக்களும்,புதிய திட்டங்களும்,புதிய முயற்சிகளும் இல்லாத  "zero effect" வெற்று ஆரவாரப் பேச்சு என்று கிண்டல் செய்கிறது


modi

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை எப்படியிருக்கு?



வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி........

thanks some source taken from my twitter friend @Dhushtan

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1