google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நான் அறிந்த கவிப்பேரரசு!

Sunday, July 13, 2014

நான் அறிந்த கவிப்பேரரசு!


இது என் அனுபவப் பதிவு மற்றபடி நான் அறிந்த கவிப்பேரரசு! என்ற இப்பதிவின் தலைப்பை பார்த்ததும் எனக்கும் அவருக்கும் ஏதும் பெரிய தொடர்பு இருக்கும் என்று நீங்கள்  நினைத்துக் கொண்டீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பு அல்ல....

வடுகபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவர் அப்போதைய SSLC வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் அப்போதே அவரது பேச்சு இப்போது அவர் பேசுவதுபோல் தூய தமிழில் இருக்கும்

ஒருமுறை எங்கள் பள்ளிக்கு கல்வித்துறை உயர் அதிகாரி வந்தபோது பள்ளி மைதானத்தில் நாங்கள் அனைவரும் கூடியிருக்க வைரமுத்து அவர்கள் அந்த அதிகாரியை வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டார் 

"வானத்து விண்மீன்களாக ஜொலிக்கும் மாணவர்கள் மத்தியில் முழு நிலவாய் ஒளிவீசும் அய்யா அவர்களே!".....என்பது போல் அந்த அதிகாரியை வாழ்த்தி அவர் ஆரம்பித்து கவிதை நடையில் பேசிய பேச்சு இன்னும் என் காதில் ரீங்காரமிடுகிறது

பள்ளிப் படிப்பை முடித்தப்  பிறகும் அவரை நான் அடிக்கடி வடுகப்பட்டியில் ஒரு ஜவுளிக்கடை மாடியில் இருந்த பொது நூலகத்தில் அமர்ந்து படிப்பதை அறிந்துள்ளேன் அவர் படிக்காத புத்தகங்கள் அங்கே எதுவும் இல்லை என்று நூலகர் சொல்லவும் கேள்விப்பட்டுள்ளேன் 

பிறகு எதுவும் அவரைப்பற்றி நேரிடையாக தெரியாது ஆனாலும் அவரது எழுத்துக்களையும் கவிதைகளையும் அன்று அவரை அதிகம் ஆதரித்த குங்குமம் பத்திரிகையில் படித்து தெரிந்துகொள்வேன் 

எனது கல்லூரி காலங்களில் அவரது வைகறை மேகங்கள் கவிதைத் தொகுப்பை பலமுறை படித்து நானும் ஒரு கவிஞனாக வேண்டும் என்று ஆசையில் எதையாவது எழுதி தள்ளுவது உண்டு 

ஆனாலும் கவிஞன் என்றால் ஏளனமாகப் பேசும் நண்பர்கள் மத்தியில் நானும் ஒரு கவிஞன் என்று சொல்வதற்கு கூச்சப்பட்டு எதுவும் சொல்வதில் ஆனால் விதிவிடவில்லை 

நான் படித்து முடித்து 1983-ல் சென்னை வந்தபோது நண்பருடன் தங்கி இருந்த அறை கோடம்பாக்கம்...... ட்ரஸ்ட்புரம் வைரமுத்து வீடு இருந்த தெருவில் முதலாவதாக இருந்த சில கடைகள் மாடியில் இருந்தது 

மீண்டும் அவரை காணும் வாய்ப்பு கிடைத்தது அப்போது 1981-காலகட்டத்தில் ராஜபார்வை   படத்துக்காக  அந்தி மழை பொழிகிறது...... என்ற பாடல் அவர் மெயின் ரோட்டில் ஆட்டோ பிடிக்க அந்த தெருவில் நடந்து சென்ற  போது அவர் மனதில் தோன்றியதாக எழுதியதை ஒரு பத்திரிகையில் படித்த நியாபகம்

ஆனால் நான் காணும் காலக்கட்டத்தில் அவர் வசதியாக கார் வைத்திருந்தார் அடுத்த வருடமே ட்ரஸ்ட்புரம் பிள்ளையார் கோயில் அருகில் அதாவது நான் தங்கியிருந்த பிரமச்சாரிகள் அறைக்கு எதிரே புது வீடு கட்டி குடியேறிவிட்டார் 

எப்போதாவது  அவரது தலை தெரியும் ஆனாலும் அவரை சந்திக்க நினைத்ததில்லை நானும் ஒரு ஏகலைவனாக தூரத்திலிருந்தே நிறைய கவிதைகள் எழுதி வைத்தேன் சில அன்றைய கணையாழி,தீபம்...போன்ற பத்திரிகையில் பிரசுரமாயின 

ஒருநாள் ஏதோ ஒரு கவிதைக் கடவுள் என் கனவில் வந்து......அட பைத்தியமே பிழைக்கும் வழியை விட்டுவிட்டு கவிதை எழுதி வீணாகப் போகாதே என்று சொன்னதால்  நானும் எழுதிய கவிதைகளை கிழித்து போட்டேன் எழுதுவதையும் விட்டுவிட்டேன் நானாக ஒரு வேலையை தேடி உழைத்து பிழைத்துக் கொண்டேன் 1985-ல் கோடம்பாக்கத்தை விட்டு ஓடிவிட்டேன் 

சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு எனக்கு கிடைத்த ஒய்வு நேரத்தில் என்னுள் ஒளிந்து இருந்த கவிஞன் மெதுவாக தலைக்காட்டினான் கீற்று,எழுத்து... வலைதளங்களில் மீண்டும் கவிதை எழுதினான் வலைதளங்கள் சட்டதிட்டங்கள் இடையுறாக இருந்ததால் அங்கே எழுதுவதை விட்டு இப்படிபரிதி.முத்துராசன்,கவிதைவானம்.. பிளாக்கர் ஆரம்பித்து உங்கள் பொன்னான நேரத்தை வீனடிக்கிறான் 

vairamuthu

இவை எல்லாவற்றுக்கும் காரணமாக என் 11-வது வயிதிலிருந்தே என்னுள் இந்தக் கவிதை உணர்வை   ஊட்டிய கவிப்பேரரசு வைரமுத்துக்கே வெளிச்சம் 

இன்று அவரது பிறந்த நாள் என்றதும் வாழ்த்துக்களுடன்.........

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1