google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டரில்-சச்சின் டெண்டுல்கர் Vs மரியா ஷரபோவா

Thursday, July 3, 2014

ட்விட்டரில்-சச்சின் டெண்டுல்கர் Vs மரியா ஷரபோவா


இன்று ட்விட்டர், ஃபேஸ்புக்சமுக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தெரியாது என்று கூறிய டென்னிஸ் ரஷ்ய விராங்கனை மரியா ஷரபோவா மீது கேலியும் கிண்டலுமாக..........

தற்போது  லண்டனில் நடந்துவரும் விம்பிள்டன்டென்னிஸ் போட்டியை கண்டுகளிக்க சென்றுள்ள சச்சின் அங்கே  மரியா ஷரபோவாவின் விளையாட்டுப் போட்டியையும் கண்டுகளித்தார் 

போட்டி  முடிவில் மரியா ஷரபோவா தன் போட்டியை காண வந்துள்ள பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்காமுக்கு நன்றி தெரிவிக்க.... நிருபர்கள் அவரிடம் சச்சின் டெண்டுல்கரும் உங்க விளையாட்டை பார்த்தாரே அவருக்கு நன்றி இல்லையா? என்று கேட்க........சச்சினா? அவர் யார் என்றே தனக்கு தெரியாது என்று சொல்லி போய்விட்டார்........

இதை  ஒரு பெரிய குற்றமாக நம்ம ட்விட்டர்,முகநூல்வாசிகள்
நடிகர்  சிங்கமுத்து ஒரு படத்தில் வடிவேலுவை கருப்பா...தலையில சுருள் முடியோடு ஒருத்தர தெரியுமா? என்று அடித்து நொறுக்குவார் அந்தக் கதை போல காமெடியாக்கிவிட்டார்கள்.........

இதுதான்  உண்மையான சச்சின் முகம்...........



அதேநேரம் சச்சினையே இந்தியாவில்  நிறைய பேருக்கு தெரியாது என்று.........

Chandra Sekar@chandar187 
இந்தியால இருக்க எங்க ஆயாவுக்கே சச்சின் யாருன்னு தெரியல அப்புறம் எப்படி மரியா ஷரபோவாக்கு தெரியும்

இதில  சச்சின் படத்தில நடித்த நடிகர் விஜய்யையும் விட்டுவைக்கவில்லை 

BELLPHIN@Belpin_Yesudhas 
சச்சினை தெரியாது என கூறிய மரியா ஷரபோவா ..# அவங்க சொன்னது விஜய் நடிச்ச சச்சின் படத்தயா இருக்கும்

Manoranjan @MManoranjan 
என‌க்கென்னமோ இதுல பாதிப்பயலுக 'மரியா ஷரபோவா' யாரோ ஹிந்தி நடிகைனு நெனச்சு குதிச்சுக்குட்டு இருக்காய்ங்கன்னு தோணுது!

செந்தழல் ரவி@senthazalravi 
இந்தியர்கள் எப்படியான சோஷியல் மீடியா முண்டங்களாக மாறிவிட்டார்கள் என்பதை மரியா ஷரபோவா பேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்.
இப்படியும் பஞ்சாயத்து பண்ணும ட்விட்டர்..........

LENIN PRABHU@nleninprabhu 
பக்கத்து வீட்டுல யார் இருக்கிறாங்க என்ற விவரம் கூட தெரியாம வாழ்கிற நாமக்கு எதுக்கு சச்சின் மரியா ஷரபோவா பஞ்சாயத்து

Peacock@Priyaa_S 
மரியா ஷரபோவா மட்டும் மதர் தெரசாவ தெரியாதுன்னு சொல்லியிருந்தா, இவங்கல்லாம் எனக்கென்ன வந்துச்சின்னு வேலைய பாக்க போயிருப்பாங்க:-)))

டான் டான் டான் @krajesh4u 
எனக்கு சச்சின் டெண்டுல்கரைத் தெரியாது- மரியா ஷரபோவா //இதை சொல்லியே இந்த புள்ள யாருன்னு இந்தியா பூரா தெரிஞ்சிடுச்சு ;))

வெங்கி@VenkysTwitts 
எனக்கு சச்சினை தெரியாது - மரியா ஷரபோவா # சரி பொழச்சு போமா ஆனா, எங்க பவர்ஸ்டார மட்டும் தெரியாதுனு சொல்லிடாத, அவ்ளோதான்.

தம்பியின் தம்பி@paramesh2006 
மரியா ஷரபோவா,சச்சின் யார் என்று கேட்டதால்,அதிர்ச்சியில் சச்சின் ரசிகர் தற்கொலை என்ற செய்தி இன்னும் வரலயே? #என்னமா பொங்குறானுக?

கணேசன்@Railganesan 
மரியா ஷரபோவா சச்சினை தெரியும்னு சொல்லியிருந்தா ஒருவேளை ஏறின ரயில் கட்டணம்,பெட்ரோல் விலையெல்லாம் குறைந்திருக்குமோ...???


ஒருத்தரு  மரியா ஷரபோவா பேஸ்புக் பக்கத்திலேயே போய் தமிழில் வாந்திஎடுத்துள்ளார்.........



எத்தனையோ  சமுக புரட்சி செய்த ட்விட்டர்,பேஸ்புக் வலைதளங்கள்
இப்போதெல்லாம் இந்த சமுக வலைதளங்கள் வீடியோ-கேம் போன்று விளையாட்டு தளமாகிவிட்டது 

இது இன்று நடந்த சந்திப்பு............





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1