google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பேஸ்புக் செய்த தில்லு முல்லு

Saturday, July 5, 2014

பேஸ்புக் செய்த தில்லு முல்லு


சமுக வலைதளங்களில் இன்று முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தனது வாடிக்கையாளர்களிடம் அவர்கள் அனுமதி இல்லாமல் உளவியல் சோதனை நடத்தி தனது தில்லு முல்லு வேலையை காட்டியுள்ளது 

பேஸ்புக் வலைதளம் தனது வாடிக்கையாளர்களில் 7 லட்சம் பேரை தேர்வு செய்து அவர்களின் நியுஸ் பிடில் (NEWS FEED) சிலருக்கு நல்ல செய்தியும் சிலருக்கு கெட்ட செய்தியும் வெளியிட்டு அவர்களது மனநிலையை சோதனை செய்தது 

நல்ல  செய்தியை படித்தவர்களின் பதிவு நல்லபடியாகவும் கெட்ட செய்தியை படித்தவர்களின் பதிவு தீயவையாகவும் இருந்தது இப்படி செய்திகள் பயனாளிகளின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்துமா? என்பதை கணிக்கவே பேஸ்புக் ரகசியமாக இந்த தில்லு முல்லு வேலையை செய்துள்ளது

அனுமதியில்லாமல் பேஸ்புக் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தியதால் அதிர்ச்சி அடைத்த பயனாளிகள் 7 லட்சம் பேரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளது 

உலகளவில் பேஸ்புக்கில் அதிக பயனாளிகள் இருப்பது இந்தியா என்று சமீபத்தில் பேஸ்புக் COO நமது பிரதமர் மோடியை சந்தித்து தெரியப்படுத்தினார் 

நண்பர்களே! பேஸ்புக்கில்  உள்ளவர்கள்தான்   மோசடி செய்கிறார்கள் என்று நினைத்தால் பேஸ்புக்கே  மோசடி வேலை செய்கிறது என்று அறிந்தபோது..............

நீங்களும் சமுக வலைதளங்களில் இருப்பீர்கள் என்றால் உஷாராக இருக்கவும் உங்களை அறியாமலேயே நீங்கள் ஏமாற்றப்படலாம் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1