google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ரயில்வே பட்ஜெட்-மோடி அரசின் கண்துடைப்பா?

Tuesday, July 8, 2014

ரயில்வே பட்ஜெட்-மோடி அரசின் கண்துடைப்பா?


பிரதமர் மோடி அரசு பதவியேற்ற பின்  இன்று வெளியிட்ட ரயில்வே பட்ஜெட் இந்திய முன்னேற்ற வெற்றிப் படிக்கட்டா? அல்லது வெறும் கண்துடைப்பா?........

மத்திய அமைச்சர் சதானந்தா கௌடா...... ரயில்வே துறை ஒவ்வொரு ஒரு ரூபாயையும் சம்பாதிக்க 94 பைசாக்களை செலவிடுவதாகக் கூறினார்.

ரயில்வே பட்ஜெட்டின்  சில அம்சங்கள்..........
-இணையதளம் மூலம் ஆன்-லைனில் நிமிடத்துக்கு 7200 டிக்கட்டுகள் விநியோகிக்கப்படும்
-ஏ.சி,முதல்வகுப்பு பெட்டிகளில் வை-பை வசதி
-ரயில் போகுமிடத்த கண்டுபிடிக்கும் வசதி மேலும் புல்லட் ரயில் பற்றிய ஆய்வு
-பயணிகளை அலர்ட் செய்யவும் உணவு ஆர்டர் செய்யவும் எஸ்.எம்.எஸ் வசதி
-ரயில் காவலர்களுக்கு செல் போன், பெண்கள் பெட்டியில் பேன் காவலர்கள்
- அந்நியன் படத்தில் வருகின்ற மாதிரி ரயில் உணவு தரம் கம்ளைன்ட் 
-சாமி கும்பிட ஆன்மீக தளங்கள் ரயில் மூலம் ஒருங்கிணைப்பு
-ரயில்வே தொழில் நுட்பம் படிக்க ரயில் பல்கலைக் கழகம்
இன்னும் சில திட்டங்கள் வெளியிட பாஜக உறுப்பினர்கள் நரேந்திர மோடி ஜிந்தாபாத் என்று முழங்க ரயில்வே பட்ஜெட் நிறைவடைந்தது

இந்தியாவில் இதுவே முதல் தடவையாக ஒரு ரயில்வே மந்திரி தன் ட்விட்டர்,பேஸ்புக் வலைதளங்களில் பட்ஜெட் பற்றிய முழு அப்டேட் செய்தவர் ஆவார்

27 புதிய ரயில் சேவைகளில் தமிழகத்துக்கு 4 புதிய ரயில்கள் மட்டுமே மும்பைக்கு விரைவில் புல்லட் ரயில் வரலாம் பட்ஜெட்க்கு முன்பே பயணிகள்,சரக்கு டிக்கெட்கள் விலையேற்றி விட்டத்தால் இதில் புதிய வரிகள் இல்லை

நாட்டி நாரதர்®@mpgiri 
முதல்தர அந்தஸ்த்து உள்ள ரயில் நிலையங்களில் WIFI வசதி செய்யப்படும் # ஓ அப்படீன்னா இனி பாத்ரூம்ல தண்ணி வரும் போல

♥மதில்♂MALE♂பூனை♥@ponram123 
இறங்க வேண்டிய இடம் வந்தால் SMS மூலம் எழுப்பும் வசதி -ரயில்வே#நாங்கெல்லாம் தூங்கும்போது தலையில் "இடியே" விழுந்தாலும் முழிக்கமாட்டோம் SMSஆம்ல?

புத்திகாலி@Tottodaing 
ஒரு ரூபாய் சம்பாதித்தால் 94 பைசா செலவாகி விடுகிறது, 6 பைசாதான் மிச்சம்: ரயில்வே அமைச்சர் # அப்படின்னா ரயில்வே நிர்வாகம் ஏழையல்ல!

சால்ட்&பெப்பர் தளபதி@thalabathe 
எல்லா தொலை தூர டிரைன்லயும்,ஒவ்வொரு கோச்'கு ஒரு ஆயாவ நியமிக்குறாங்கலாம், ஸ்டேசன் தாண்டியும் தூங்குனா "ச்சே எந்திருச்சிப்போ நாயே" ன்னு சொல்ல

உழவே தலை@ThanjaiSabari Protected Tweets 
"யு-டர்ன்" எடுப்பது போன்ற ரயில்களை அறிமுகப் படுத்தாததால், அரவிந்த் கெஜ்ரிவால் அதிருப்தி:-))

கருத்து கந்தன்©@karuthujay 
இறங்க வேண்டிய எடம் வந்ததும் பயணிகளை ரயில்வே SMS அனுப்பி எழுப்பும்- ரயில்வே பட்ஜெட் # ஃபுல் மப்புல மல்லாந்தவனுக்கு SMS எல்லாம் வேஸ்ட்டு-/

செந்தழல் ரவி@senthazalravi 
//இனி எரிபொருள் விலைக்கு ஏற்ப ரயில் கட்டணம் உயரும்!// நல்ல திட்டம். நன்றி மோடி. ஆப் கி பார் !!!

VIBHU@GOVINDARAJEN 
மும்பை-ஆமதாபாத் இடையே விரைவில் புல்லட் ரயில்கள் அறிமுகம்! #இவங்க சாதா ரயிலயே கமுத்தி போடுவானுக,இதை என்ன பண்ணப் போறானுவளோ...

ஆப்டிமஸ் பிரைம்@seabeggar1 
மேல்மருவத்தூர் - வேளாங்கன்னி இடையே புதிய ரயில்--- // மாரியம்மாவுக்கும் மேரியம்மாவுக்கும் கனெக்சன் குடுக்குராங்க போல..!!
 நெல்லை அண்ணாச்சி@drkvm 
நம்ம அவர்களை புறக்கணித்தோம்#அவர்கள் நம்மை புறக்கணிக்கிறார்கள்//ரயில்வே பட்ஜெட்

Oneindia Tamil@thatsTamil 
இனி ஓடும் ரயிலிலும் "பிசினஸில்" ஈடுபடலாம் - ரயில்வேயின் "ஹை டெக்: அறிமுகங்கள்!

Maalaimalar.com@maalaimalar 
ரெயில்வே பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரித்து பாராளுமன்ற வாசலில்... சதானந்த கவுடாவின் காரை முற்றுகை


மேற்குவங்கத்துக்கு அறிவிக்கப்பட்ட ஒரு ரயிலையும் வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள் - மம்தா பானெர்ஜி போர்க்கொடி! கர்நாடகத்துக்கு ரயில்வே பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை சித்தராமையா புலம்பல்! ........Krishna Moorthy S


Rejuvenated!@iKaruppiah 
தமிழ்நாட்டுக்கு இது ரயில் பைபாஸ் பட்ஜெட். சுத்தி போய்ட்டாங்க.




நண்பர்களே! உங்கள் பார்வையில்..........
பிரதமர் மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் இந்தியாவை முன்னோக்கி செலுத்தும் முதல் வெற்றிப் படிக்கட்டா...? அல்லது வெறும் கண்துடைப்பா?





வாக்களுக்கும் அனைவருக்கும் நன்றி..............



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1