google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணமே இல்லையா?

Wednesday, July 9, 2014

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணமே இல்லையா?


ஸ்விஸ வங்கியில் இந்தியர்கள் கறுப்பு பணம் இல்லை என்று மத்திய அமைச்சர்  ஜெட்லி சொல்கிறார்......... மோடி மேஜிக்-கில் இதுவும் ஒன்றா?

ஸ்விஸ்  வங்கியில் பதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி இந்திய ரூபாயை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வலுவடைந்தது 

அப்போதைய மத்திய அமைச்சர் சிதம்பரமும் ஸ்விஸ வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியலை நாங்கள் கேட்டோம், அவர்கள் தரவில்லை என்று அறிவிக்கை விட்டார்.....

தேர்தலுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்விஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணம் மீட்கப்படும் என்று பேசினார் 

அதே போல் ஆட்சிக்கு வந்தப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகப் பொறுப்பை ஏற்ற முதல் நாளே கருப்புப் பணத்தை மீட்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் குழு அமைத்தார்.

அந்நாட்டில்  பதுக்கி உள்ள இந்தியர்கள் பட்டியலைக் கேட்டு இந்திய அரசும் கடிதம் எழுதியது 

இப்போது கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் பற்றி ஏற்கத்தக்க கோரிக்கைகளை மட்டுமே எழுப்ப வேண்டும் என்று ஸ்விஸ் வங்கி அறிவித்துள்ள நிலையில்.....

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணமே இல்லை என்று மத்திய அமைச்சர் ஜெட்லி அறிவித்துள்ளதாக சமுக வலைதளங்களில் பேசப்படுகிறது

js.riyas@JSRIYAS 

ஸ்விஸ வங்கியில் இந்தியர்களின் பணம் இல்லை - இன்றைய செய்தி நாளைக்கி அப்பிடி ஒரு பேங்கே இல்லனு சொல்லுவாகெ

தில்லுதொர..@pbbalajii 
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் இல்லை - ஜெட்லி #ஸ்வீஸ் பேங்க்ல பணத்தை போட்டாலே வெளிநாட்டுக்காரன்னு சொல்றாரு!

பாரதி@BharathiBigB 
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் இல்லை - இன்றைய செய்தி # நாளைய செய்தி ஸ்விஸ் வங்கியில் பணமே இல்லை… ஏன் ஸ்விஸ்'ல் வங்கியே இல்லை…

மர்ஹபா (வலி Jee)@coolguyvali 
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் இல்லை - ஜெட்லி # உங்க பேர் ஜெட்லி இல்ல புரூஸ்லின்ற மாதிரி இருக்கு உங்க விளக்கம்....

RajaR@Rajarath 
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் இல்லை - ஜெட்லி # நீ காங்கிரஸ் கட்சியிலேயே போய் சேந்துடு சிவாஜி..

செ. செந்தில்குமார்@SeSenthilkumar 
ஓவாக் கானத்து உயர்மரம் பழுத்த துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே! - ஒளவை #ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்போரைச் சொல்றாங்க!

எர்னெஸ்டோ:-)@ErnestoGuvera 
கருப்பு பண பட்டியலை வழங்க ஸ்விஸ் வங்கிகள் முடிவு- செய்தி//இவ்வளவு பப்ளிசிட்டிக்கு பிறகும் எந்த பைத்தியகாரனாவது அங்க பணத்தை வச்சிருப்பானா!!

selvi ramalingam @selviramalingam 
ஸ்விஸ் வங்கில இருந்த என்னோட கணக்கை மூடிட்டு பணத்தையெல்லாம் கொண்டு வந்த்துட்டேன் ...

உங்களுடன் நான்!@riyazdentist 
கருப்புப்பணத்தை மீட்க எல்லாரும் ஸ்விஸ் வங்கிகளில் வேட்டை ஆரம்பித்து நேரத்தில் கரகாட்ட மோகனாம்பாள் கிட்ட 4 கோடி பணம்!

2012-ல் ஸ்விஸ் வங்கியில் முதலீடு:இந்தியா 55 வது இடத்தில் இருப்பதாக வந்த செய்தி இப்போது இந்தியர்கள் யாரும் இல்லை என்பது ஆச்சரியம்  


இது உண்மையாக இருக்குமா? ஸ்விஸ் வங்கியை விட்டு வேறு நாட்டுக்கு மாத்திட்டார்களா? அல்லது வெளிநாடுகளில் பிளாட்,தீவு...எதுவும் வாங்கி  விட்டார்களா?     மோடி மேஜிக்-கில் இதுவும் ஒன்றா?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1