google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நீதிபதி கட்ஜுவின் குற்றசாட்டு சரியா? தவறா?

Friday, July 25, 2014

நீதிபதி கட்ஜுவின் குற்றசாட்டு சரியா? தவறா?


முன்னாள் நீதிபதி கட்ஜு தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த ஊழல் நீதிபதியை காப்பாற்ற திமுக மந்திரி ஒருவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மிரட்டியதாக குற்றம்சாட்டி எழுதியுள்ளார்

மார்கண்டேய கட்ஜு  2004-2005 ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது மாநிலத்தில் அதிமுக ஆட்சியும் ஜெயலலிதா முதல்வராகவும்   மத்தியில் திமுக ஆதரவு காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராகவும் இருந்தனர்

ஜெயலலிதா நீதித்துறையில் தலையிடவில்லை என்று பாராட்டும் கட்ஜு ஊழல் குற்றச்சாட்டில் ரகசிய விசாரணையில் இருந்த ஒரு நீதிபதிக்கு பணி நீடிப்பு செய்ய திமுக மத்திய அமைச்சர் மன்மோகன் சிங்கை கெடுபிடி செய்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்

காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பதவியை பெற்ற கட்ஜு பாஜக ஆட்சியில் அதை தக்கவைத்துக்கொள்ளவே இந்த அர்த்தமற்ற குற்றச்சாட்டை எழுப்புவதாக திமுக தலைவர் எழுப்ப..........

இந்த விவகாரம் சூடு பிடித்த நிலையில் ஒருவருக்கொருவர் சொத்து கணக்கு கேட்டு ஊடகங்களில் குடுமி பிடி சண்டை போடுகிறார்கள்

ஒரு குற்றச்சாட்டு காலந்தாழ்த்தி எழுப்பப்படுகிறது என்பதனாலேயே, அந்தக் குற்றச்சாட்டு பரிசீலனைக்கு தகுதியற்றதாகி விடாது என்றும் அதனால் நீதிபதி கட்ஜுவின் குற்றசாட்டு சரியே என்போரும் உண்டு........

அதேநேரம்...........

ஒரு நீதிபதியே சரியான நேரத்தில் குற்றத்தை சுட்டிக்காட்டாமல் இப்படி குற்றத்துக்கு உடந்தையாக இருந்துவிட்டு இன்று நியாயன்மார் போல் பேசுவது நியாயமா..? என்றும் அதனால் நீதிபதி கட்ஜுவின் குற்றசாட்டு தவறு உள்நோக்கம் கொண்டது என்போரும்  உண்டு......


நண்பர்களே! உங்கள் பார்வையில்.........

நீதிபதி கட்ஜுவின் குற்றசாட்டு சரியா? தவறா?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1