google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நானும் கடவுளைக் கண்டேன்....

Tuesday, July 15, 2014

நானும் கடவுளைக் கண்டேன்....

காமராஜரை பற்றிய செய்திகள் நிறைய நீங்கள் அறிந்திருக்கலாம் ஆனால்... இது இதுவரை நீங்கள் அறிந்திராத என் அனுபவப் பதிவு.என் சிறுவயதில் நான் அவரை நேரில் கண்ட நிகழ்வு.....

அப்போது நான் வடுகப்பட்டியில்  எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் அன்று காமராஜர் வடுகபட்டி பேருந்து நிறுத்தத்தில் பேசுகின்றார் என்று அறிந்து வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு.......

வடுகபட்டி  பேருந்து நிறுத்தத்தில் ஓரமாக நாலு கம்புகளை நட்டி அதன் மீது  பலகைகளை அடுக்கி ஒரு சிறு மேடை போட்டிருந்தார்கள் காமராஜரை அருகில் நின்று பார்க்க வேண்டும் என்று மேடை அருகிலேயே நின்றுகொண்டிருந்தேன் மக்கள் கூட்டம் அதிகம் இல்லை நூறு பேருக்கும் குறைவே

சிறிது நேரத்தில் காமராஜரும் காரில் வந்து இறங்கினார் அவரை மேடை மீது ஏற்றினார்கள் முதலில் இரண்டு மூன்று பேர் கதர் துண்டு போற்றினார்கள் அவரும் பேச நினைத்து மைக் அருகில் வந்தார் 

அதற்குள் நின்ற கூட்டம் முண்டியடித்து கைகளில் கதர் நூல் மாலைகளுடன் (வடுகபட்டியில் நெசவாளர்கள் நிறைய என்பதால் காட்டன் நூல் மாலை காசுகொடுத்து வாங்க வேண்டாம்) அவருக்கு அணிவிக்க அனைவரும் மேடை மீது ஏறினார்கள் 

எல்லோரும் மேடை ஏறியதால் பாரம் தாங்காமல் அந்த சிறு மேடையும் ஒருபுறம் படக்கென்று சாய்வாக இறங்கிவிட்டது கீழே விழப்போன காமராஜரை மேடையில் இருந்தவர்கள் பத்திரமாக கைத்தாங்களுடன் கீழே இறக்கினார்கள் 

அவருக்கோ ஏக கோபம் ஆனாலும் எதையும் தன் முகத்தில் காட்டாமல் நல்ல மேடையா போடக்கூடாதா....?  என்று கேட்டு காரில் ஏறினார் காரும் புறப்பட்டது நானும் மற்றவர்களும் காரைப் பார்த்து கொண்டு நிற்க........

சிறிது தூரம் சென்ற கார் நின்றது காரிலிருந்து இறங்கினார் அவரைக் கண்டதும் மீண்டும் நாங்கள் அவரை நோக்கி ஓடினோம் பக்கத்தில உடகார்ந்து பேசுர மாதிரி இடம் இல்லையா...? என்று அவர் கேட்க......

வடுகபட்டி ஊர் எல்லையில் உள்ள பெரியகுளம் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் ஒரு ஹால் இருப்பதாக சொல்ல....

 அங்கே தான் பேசுகிறேன் எல்லோரையும் அங்கே வரச்சொல்லுங்கள் என்று  சொன்ன அவர் வழிகாட்ட கூட்டத்தில் சிலரை  அவரது காரில் ஏற்றிக்கொண்டு பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் சென்றார்......

மக்கள் சிலர் விரைந்து அங்கே சென்றனர் நானும் ஓடிச் சென்றேன் நான் போகும் போது பஞ்சாயத்து ஆபிஸ் அறையில் அவர் பேசிக்கொண்டிருந்தார் அவரது பேச்சை அறிந்துகொள்ளும் புரிந்து கொள்ளும் வயது எனக்கு இல்லை என்றாலும் அவரை அன்று அருகில் நின்று பார்த்ததில் இதுவரை பெருமை கொள்கிறேன் 

இன்று  அரசியல் தலைவர்கள் எட்டு அடுக்கு பத்து அடுக்கு பாதுகாப்பு என்றும்  கையில் துப்பாக்கி ஏந்திய கறுப்பு பூனைப்படை காவலர்கள் மத்தியிலும் மேடை ஏறி பேசும்போது.......

அன்று காமராஜர் பேசம் போது நடந்த நிகழ்ச்சி.....
அவரது எளிமையும்,கோபமான சூழ்நிலையிலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாத அவரது பெருந்தன்மையும்  அந்தக் கடுமையான நிலையிலும் மக்களை சந்திப்பதை தவிர்க்க கூடாது என்ற அவரது நேசத்தையும் கண்டபோது...........

நானும் கடவுளைக் கண்டேன் காமராஜர் உருவிலே.....




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1