google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சென்னை டு டெல்லி-அம்மா எக்ஸ்பிரஸ்

Thursday, July 17, 2014

சென்னை டு டெல்லி-அம்மா எக்ஸ்பிரஸ்

 சென்னையிலிருந்து டெல்லிக்கு அம்மா எக்ஸ்பிரஸ் என்று ரயில் இயக்கவேண்டும் என்று அதிமுக எம்.பி.கே.என் ராமச்சந்திரன் மக்களவையில் கோரிக்கை எழுப்பினார்.....

தமிழக  முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக எம்.பிக்கள் ஒவ்வொருவரும் விதவிதமாக தங்கள் அம்மா ஆசையை வெளியிட்டார்கள் 

அதிமுக எம்.பி.கே.என் ராமச்சந்திரன் ரயில்வே பட்ஜெட் விவாதத்தின் போது அம்மா உணவகம்,அம்மா மருந்தகம்....போன்று அம்மா எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை டு டெல்லி விடவேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர்கள் அத்தைனை பேரையும் பின்தள்ளி புறமுதுகு காட்டி ஓடவைத்தார் 

அம்மா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அம்மா புகைப்படத்துடன் அப்படியொரு  ரயில் சென்னை டு டெல்லி ஓடும் என்றால்..........
 அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாட்டு அம்மா புகழ் ஜுரம் இந்தியா முழுக்க டெங்கு போல் ஸ்பீடாக பரவி அடுத்து அம்மா பிரதமராக வாய்ப்பு உள்ளது

அடுத்து அம்மா பிரதமர் ஆனால் கே.என் ராமச்சந்திரன் அண்ணணுக்கு ரயில்வே மந்திரியாகும் யோகம் இருப்பதாக அரசியல் ஆருடம் சொல்கிறது 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1