google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மீண்டும் இந்தி மொழி திணிப்பு அவசியமா?

Thursday, June 19, 2014

மீண்டும் இந்தி மொழி திணிப்பு அவசியமா?


சமுக வலைதளங்களில் இந்தியை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு தமிழக முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

அரசின் அனைத்துத் துறைகளிலும் இந்தி மொழியை பயன்படுத்துமாறு மத்திய அரசு ஊக்குவிக்கும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார் மீண்டும் இந்தி மொழி திணிப்பு ஆரம்பமாகிறதா?

தமிழன் மட்டும்தான் இன்னும் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறான் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நடக்கும் போது ஆந்திரா,கர்நாடகா,கேரளா... போன்ற மாநிலங்ள் தமிழகத்தைப் போல்  இந்தியை எதிர்க்கவில்லை  என்றும்...........

இந்தி கற்றுக்கொள்வதினால் அகில இந்திய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்று தமிழகத்தை விட அவர்கள் முன்னேற்றம் அடைந்தார்களா? அல்லது ஆங்கிலம் கற்றுக் கொண்டதால் உலகளவில் தமிழர்கள்  முன்னேற்றம் கண்டார்களா?

வேற்றுமையில் ஒற்றுமை அதுவே இந்தியாவின் பலம்அதை மறந்து அவரவர் தாய்மொழியை புறக்கணிப்பது அசிங்கம் உலகளவில் ஒரு மொழியை கற்றுக்கொள்வதும் நன்மைதரும் ....

என்றும் நமக்கு இந்(தி)த மொழி பிரச்சனையே முழி பிதுங்கும் பிரச்சனையே 
ஒரு  தலைமுறையில் இந்தி எதிர்ப்பு திராவிட கட்சிகளுக்கு ஆட்சி பீடத்தில் அமரச் செய்தது 
இந்தத் தலைமுறையில் அதுவே நகைச்சுவையாக உள்ளது 

ட்விடர்களின் சிரிக்கவைக்கும் ட்விட்கள் 

⚽வடகறி கனலு⚽@IamKanal 
என்னது அதிகம் பேர் பேசுறதுனால இந்தி தேசிய மொழியா..அப்போ நாட்ல புலிய விட நாய் தான் அதிகமா இருக்கு.. நாய தேசிய விலங்கா அறிவிச்சிரலாமா.

ரவுடியின் தங்கச்சி @veenatalk 
இங்க பிரபலமா இருக்க அதிமேதாவிங்க ஹிந்தி எதிர்த்தா ? அவங்களும் தமிழை வளர்க்கிறேன்னு சொல்லும் அரசியல் வாதிகளும் ஒன்னுதான் #சுயநலவாதிங்க

காக்கைச் சித்தர்@vandavaalam 
இன்னிக்கு இந்திய ப்ரொமோட் பண்ணவரு, நாளைக்கு ஹிந்துத்வாவை ப்ரொமோட் பண்ணுவார். இதுக்கும் சேர்த்து சப்போர்ட் செய்யும் ஆஃபாயில் பீடைகள்!

Pradeesh@gpradeesh 
திமுக’வுக்கோ, மு.கவுக்கோ பேர் கிடைக்கும்னா இந்தி கத்துக்கக் கூட தயார்னு சிலர் நினைக்கிறாங்க போல #மகன் செத்தாலும், மருமக தாலியக்கனும் ;-))

ஆல்தோட்டபூபதி@thoatta 
நீ சொல்லி குடிக்கமாட்டேன், மூடு இருந்தா நானா குடிப்பேன்னு போக்கிரில விஜய் சொல்ற டயலாக்கே இந்தி எதிர்ப்பு/திணிப்புக்கு சரியான பதில்

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
மோடி ஆள்வதால் நாங்க ஹிந்தி கத்துக்கறோம்.ஓக்கே.நாளை ஒரு வேளை ஜெ பிரதமர் ஆனால் எல்லோரும் தமிழ் கத்துக்குவீங்களா?

படித்துறை பாண்டி®@iampadithurai 
துமாரா நாம் கியா ஹை னு எனக்கு தெரிஞ்ச இங்கிலீஷ் ல கேட்டேன் அவங்க கீத் னு சொன்னாங்க #அய்யோ கேப்டன் அது கிந்தி

பசி.!@Pa_Siva 
ஈழத்தோட குத்தகை முடிஞ்சிடுச்சி,காவியை உள்ள நுழைச்சாச்சு,சேது திட்டத்துக்கு மண்ணை போட்டாச்சு,இந்தியை நுழைசிட்டா வந்தவேலை முடிஞ்சிடும்..!#வைகோ


Raj Muthu @IamRajmuthu 
தலிவார் ஹிந்தி எதிர்ப்பு போராட்ட அழைப்பா இருக்குமோ
கனியன்@Kaniyen 
எந்த மொழி வேணும்னு நாமே முடிவெடுப்போம்,இந்தி வேண்டாம்னு பொதுமேடையில சொல்லிட்டு பேரன் பேத்திகளை இந்தி படிக்கவைக்கும் அரசியல்வாதியை நம்பாதீர்!

சுபாஷ்@su_boss2 
இந்தி திணிப்பு -மத்திய அரசுக்கு சரத்குமார் கண்டனம்.# தலைப்பாகட்டி பிரியாணியிலயுமா இந்தியை திணிச்சி புட்டாங்க.அப்போ எதிர்க்க வேண்டியதுதான்.!


சிறுத்தை™@SaThi_Ya_PrIyAn 
இந்திய கத்துகிட்டா என்ன "பிரியங்கா சோப்ரா"வையா கட்டிக்க வைக்க போறீங்க # அங்கிட்டு போறியா இல்ல சுடுதண்ணிய புடிச்சி மூஞ்சில ஊத்தவா ??

தமிழ்ப்பறவை@Tparavai 
ஃப்ரெஞ்ச் கத்துட்டு வாடான்னா, ஃப்ரெஞ்ச் கிஸ் கத்துட்டு வரும் நம்ம பயக‌கிட்ட,இந்தி கத்துக்கோன்னா, இந்திக்காரியைத்தான் கட்டிட்டு வருவாய்ங்க‌

தாய்மனம்@Thaaymanam 
மோடி - மனு தர்மம் என்ற மாய வலைக்குள் விழமாட்டார் பாமர மக்கள் நிலை உயர பாடுபடுவார் என்று தந்தோம் ஆதரவு #இந்திதிணிப்பு முதல் வீழ்ச்சி

தி.கார்த்தி@seeyouattop 
திராவிட கட்சிகள் எங்களை இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டார்கள் என புலம்புவர்களே ... நாம் பிழையின்றி தமிழ் , ஆங்கல மொழியை கற்றுக்கொண்டோமா ?

ramesh@rames_ram 
ஹிந்தி பேசறதுக்கு இந்தியாவில நெறைய பேர் இருக்காங்க...தமிழ பேசறதுக்கு தமிழன் மட்டும் தான் இருக்கான் ...

methinrajan@methinrajan 
நிறைய இந்திக்காரங்க தமிழ் தெரியாம சிறமப்படறாங்க அவங்களுக்கு தமிழ் கத்து குடுங்கப்பா சில பேர் நல்லா தமிழ் பேசுறாங்கே

இடும்பாவனம் கார்த்தி@idumbaikarti 
இந்தி படிச்சா வேலை கிடைக்குமா? இந்தி நல்லா தெரிஞ்ச இந்திக்காரன் எல்லாம் எங்க ஊருல பானி பூரி வித்துக்கிட்டு இருக்கான்பா!!!

நண்பர்களே! உங்கள் பார்வையில்.........
இன்றைய இந்தியா விலைவாசி உயர்வு,அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்,வேலையில்லா திண்டாட்டம்....இதுபோன்ற அவலங்களில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது........மீண்டும் இந்தி மொழி திணிப்பு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுமா?





பிரதமர் மோடியின்  இந்தி ட்விட்...........


அதுல பாருங்க...அண்ணேன் நம்ம பிரதமர் மோடிஜி அவருடைய டிவிடர்ல ஏகப்பட்ட ட்விட் ஆங்கிலத்துல போடுற பிரபலம்....திடிர்னு ஒரு ஹிந்தி ட்விட் போட்டாரு...........
நானும் மண்டைய பிச்சிக்கிட்டு கூகுள்ல கொடுத்து தமிழாக்கம் பன்னுனா.....

"வெற்றி மற்றும் தோல்வி இரண்டு கற்றல் | விஜய் தோல்வியை விதைக்கிறது யார் அவர் அழிவு விதைக்கிறது தோல்வியில் இருந்து கற்று இல்லை, அறிய முடியாது | "

.....இப்படி தமிழாக்கம் பண்ணுச்சு ...அட...கொக்கமக்கா இங்கே எப்படிடா விஜய் வந்தாரு...? னு பேயடிச்சி...இன்னும் தெளியலங்க....உங்களுக்கு இந்தி தெரிஞ்சா சொல்லுங்க   

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1