google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மோடி அலையா? கடல் அலையா?-கலைஞர்

Tuesday, March 11, 2014

மோடி அலையா? கடல் அலையா?-கலைஞர்

தமிழ்நாட்டில் மோடி  அலை வீசுகிறதா? என்ற கேள்விக்கு கலைஞர் இங்கே வங்காள விரிகுடா கடல் அலைதான் வீசுகின்றது என்று நகைத்தது சரியே...
உண்மையில் இங்கே எந்த அரசியல்வாதிகளின் அலையும் வீசவில்லை 

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொண்ணும் கவலையில்லை என்று வரும் தேர்தல் பற்றிய எந்த விறுவிறுப்பும் எதிர்பார்ப்பும் தமிழக மக்களிடம் இன்று இல்லை என்பதே உண்மை....

இந்த நிலைமைக்கு காரணம் ஆண்டவர்கள்தான் நான் கடவுளைச் சொல்லவில்லை மத்தியில் நம்மை ஆண்டவர்களும் அதற்கு காவடி தூக்கியவர்களும்தான் 

காங்கிரஸ் தமிழர்களை  கொலைகாரர்களாக பாவித்ததும் தமிழக மீனவர் பிரச்சனை,இலங்கை தமிழர் விவகாரம்,ஏழு பேர் விடுதலை,அந்நிய முதலீடு ஆதரவு,விலைவாசி உயர்வு... போன்றபிரச்சனைகளால்
காங்கிரஸுடன் கூட்டணி சேர யாரும் தயார் இல்லை

இதில்வேறு காங்கிரஸார் மீண்டும் ராஜீவ் படுகொலை படங்களைக் காட்டி வாக்கு கேட்கும் எண்ணத்துடன் இருப்பது.....அவர்களின் அரசியல் சுயநலம்...ஆதாயம் தேடும் குறுக்கு வழியை உணர்த்துகின்றது.........  

அதனால் மக்கள் தேர்தலை புறக்கணிப்பார்களா? இல்லை தேர்தல் தேதி அன்று இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும்....

செம்மரிஆடு போல் கூட்டமாக யாரோ ஒருவருக்கு ஒட்டு போட்டு............

அப்புறம் அஞ்சு வருசத்திற்கு தலையில் அடித்துக்கொண்டு............ 



இங்கே  வீசுவது..........டாஸ்மாக் அலை.....இலவசம் அலை....காசு-துட்டு-பணம்-MONEY அலை.....

  


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1