google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: காதலர் தினம்-கலாச்சார சீரழிவா?

Tuesday, February 11, 2014

காதலர் தினம்-கலாச்சார சீரழிவா?

இங்கே வாழ்க்கைக்குக் காதல் தேவையா...? என்ற ஆராய்ச்சி செய்யவில்லை இலைமறைக் காயாக இருக்கவேண்டிய காதலை இப்படி வெளிப்படையாகக் கொண்டாடும் காதலர் தினம் நம் கலாச்சாரச் சீரழிவா...? என்று.


தங்கள் காதலை வெளிப்படுத்தும் முயற்சியாகவும் அல்லது தங்கள் காதலை மீண்டும் புத்துணர்வுடன்  தொடர்வதற்கு (Refresh or Update) இந்த காதலர் தினத்தை  வருடம் தோறும பிப்ரவரி 14-தேதி காதலர்கள் கொண்டாடுகின்றார்கள்
Made with FreeOnlinePhotoEditor.com

 மேற்கத்திய நாடுகளில் எல்லா நாட்களுமே காதலர் தினம்தான்  பொது இடத்தில் பல பேர் மத்தியில் ஒரு ஜோடி காதலர்கள் கட்டியணைத்து லிப்-லாக்கிங் செய்து கொள்வது  அங்குள்ளவர்களுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை........அன்பின் வெளிப்பாடு?



ஆனால்...இதுபோன்று காதல் ஜோடிகள் கடற்கரை,ஷாப்பிங் மால்,பூங்காக்கள், திரையரங்கம்..போன்ற பொது இடங்களில் தங்கள் காதலை வெளிப்படுத்துவது இப்போது சென்னை போன்ற நகரங்களில் காதலர் தினத்தில் மட்டுமன்றி எல்லா நாட்களிலும் நடக்க...காதலர் தினத்தில் அதிக அளவில் கட்டுப்பாடு இன்றி நடக்கின்றது....
காதலர்களுக்கு வேண்டுமெனில் இது நாகரீகமாக தெரியலாம் ஆனால் அதைக் காண்போருக்கு வாந்தி வருகின்றது.....

நமக்கென்று  ஒரு பண்பாடு,கலாச்சாரம் இருக்க இதுபோன்ற காதலர் தினம் நமது கலாச்சாரத்திற்கு சீரழிவைத் தருகின்றது என்போர் ஒருபுறம்....

ஆனால்...மனித வாழ்வின் ஜீவாதாரமகவும் தொடர்கதையகவும் உள்ள காதலை வெளிப்படுத்த இது போன்ற வருடத்தில் ஒருநாள் தேவை என்போர் இன்னொருபுறம்.....


உங்கள் பார்வையில்.....
நம்  தமிழ் நாட்டில் காதலர் தினம் கொண்டாடுவது கலாச்சாரச் சீரழிவா...? காலத்தின் கட்டாயமா...? இந்தக் காதலர் தினம் இங்கே  தேவையா...?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-19/2/2014

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1