google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தெலுங்கானாவும் சொப்பன சுந்தரியும்

Friday, February 21, 2014

தெலுங்கானாவும் சொப்பன சுந்தரியும்

கவுண்டமணியிடம் செந்தில் கேட்பது போல்...அண்ணேன் இப்ப ஹைதரபாத்தை யார் வச்சிருக்காங்க....? முந்தி நிஜாம் வச்சிருந்தாரு...அப்புறம் வெள்ளைக்காரங்க...மறுபடியும் நிஜாம்...அப்புறம் இந்தியா..........இப்ப யாருன்னே வச்சிருக்காங்க...?





















 
இந்தியாவில் ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக ஹைதராபாத் இருப்பதும் அது இப்போது தெலுங்கானா மாநிலத்தோடு இருப்பதுமே இந்தப் பிரச்னைக்கு காரணம் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றார்கள் அதே நேரம் அதுவும் இந்தியாவில் ஒரு பகுதிதானே என்பதை மறந்துவிட்டார்கள் அரசியல்வாதிகள்

ஏற்புடையது....


ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கான தனி மாநிலமானால் அது பொருளாதார வளர்ச்சியில் ராயல் சீமா பகுதியைவிட முன்னோடியாக இருக்கும் ஐ.டி.,பார்மா...தொழில்துறையில் அதீத வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள் எனவே சிறு மாநிலங்களாக இருப்பது வளர்ச்சி என்றும் தெலுங்கானா மாநிலம் ஏற்புடையது என்று சொல்வோர் அதிகம்....

ஏற்புடையதல்ல....


தெலுங்கானா தனி மாநிலமாவதால் சாலை-ரயில் போக்குவரத்து மட்டுமே உண்டு என்றும் தொழில் துறைகள் நிறைய இருப்பதால் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் மேலும் இதுபோல் பிரிவினைகள் நாட்டின் ஒற்றுமைக்கு கேடு என்றும் எனவே இந்தப் பிரிவினை வரவேற்க தக்கதல்ல என்போரும் அதிகமோ  அதிகம்

அரசியல் சூதாட்டம்.....


இவை எல்லாவற்றையும் விட தேர்தல் முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வாக்குகளை அள்ள நடத்திய அரசியல் சூதாட்டம் இதனால் அவர்களது வாக்கு வங்கி வயிறு நிரம்பலாம் என்ற அவர்களது அரசியல் கணிப்பு என்போரும் அதிகம்

 உங்கள் பார்வையில்...........
தனி தெலுங்கானா தேவையா......?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........முடிவு-29/2/2014

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1