google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பொங்கு தமிழா! பொங்கு!!

Tuesday, February 4, 2014

பொங்கு தமிழா! பொங்கு!!

நானும்  அவ்வப்போது கவிஞனாக நினைத்துக்கொண்டு இப்படி எதையாவது எழுதுவேன்........இது பொங்கல் கவிதையாக எழுதியது 
பாவம் எல்லோரும் சந்தோசமாக பொங்கல் கொண்டாடட்டும் என்று பொங்கல் முடிந்து பல நாட்களுக்குப் பிறகு இன்று வெளியிடப்படுகிறது....

































பொங்கு தமிழா!-பொங்கு!!
வங்கக்கடல்  அலையென-இந்த
பொங்கல் தினத்திலாவது
பொங்கு தமிழா!-பொங்கு!!

மதுப்பாரினிலே நீயும்
ஒன்றாய்ப் பொங்கியது போதும்
நன்றாய் போதையில் நீயும்
பன்றியாய்க் கிடந்ததும் போதும்

இலவசங்களுக்கு நீயும்
ஏங்கிக் கிடப்பதும் போதும்....
இடுப்பு துண்டு அவிழ
ஏமாந்து போனதும் போதும்

இன்னல் படும் தமிழர்
எங்கிருப்பினும்....
இருள்  களைந்திடும்
ஈடில்லா ஒளிச்சுடராய்
இணைந்திடு தமிழா!

வஞ்சக வேடதாரிகளின்
நெஞ்சைக் கிழித்திடும்
நெம்பு கோலாய் நிமிர்ந்திடு!

புதைந்து போனாலும்
மக்கிப் போகாதே......?
வீரிய  விதையாய்-தமிழா!
பீறிட்டு முளைத்திடு!

............................அன்புடன் பரிதி.முத்துராசன் 


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1