google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தேர்தல்-கூட்டணியும் சட்டினியும்

Thursday, January 23, 2014

தேர்தல்-கூட்டணியும் சட்டினியும்


தேர்தல்  கூட்டணிகள் பல வகைகள் உண்டு. அப்படித்தான் சட்டினியிலும் பல வகைகள் உண்டு அதிலும் தமிழ் நாட்டில் அரசியல்கட்சிகள் திமுக-அதிமுக இவர்கள் இருவரும் செய்யும்  கூட்டணி  வகைகள் நாம் சாப்பிடும் மிளகாய் சட்டினி,வெங்காய சட்டினி,கறிவேப்பிலை சட்டினி, தேங்காய் சட்டினி..இப்படி  இவர்கள்  கூட்டணி எந்தச் சட்டினி என்று....






























இந்தச் சட்டினி செய்வதில் கைதேர்ந்த மாஸ்டர் திமுக தலீவர் இவர் பாமக மருத்துவருடன்  செய்யும் ஒருவகைச் சட்டினி எப்பவும் ரொம்பக் காரசாரமாக இருக்கும் தின்னுரவியிங்க வாயும் எரியும் செய்தவங்க வாயும் எரியும் அது என்ன குண்டூர் மிளகாய் சட்டினியாக இருக்குமோ...?


அம்மாவும்  இந்தக் கூட்டணிச் சட்டினி செய்வதில் கைதேர்ந்தவர்கள் அது திங்க ரொம்பத் தமாசாக இருக்கும்...இந்த கூட்டணியில் ரொம்ப நொந்துபோனவர்  கேப்டன் அட..இதுதான்  கறிவேப்பிலை சட்டினியோ...? ரொம்ப வெருத்துப் போனவர் வைகோ....அது என்ன புலி..ச்சே..புளி சட்டினியோ?

எது எப்படியோ தமிழகத்தில் உள்ள அதிமுகவும் திமுகவும் பிரதானக் கட்சிகளாக   காங்கிரஸ்,மதிமுக,பாமக,பாஜக, தேமுதிக.... இப்படி ஏகப்பட்ட க...கா...கி...கூ... காக்கா கட்சிக்கள்  கூட்டுச்  சேர்ந்து இவர்கள் படைக்கும் தேர்தல் சட்டினியை   தின்று பார்க்கும் மக்கள் கண்களில் எப்போதும் கண்ணீர்தான்  கொட்டும் ..எல்லாமே வெங்காயச் சட்டினியாக இருக்குமோ...?

இப்ப  வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இவர்கள் புதுசா என்ன கத்தரிக்கா சட்டினி செய்யப் போகிறார்களோ...? இவர்கள் கூட்டணியில் சிக்கி மக்கள் சட்டினி ஆகாமல் இருந்தால் சரிதான்........


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1