google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: என்று தணியும் இந்தத் தேர்தல் தந்திர தாகம்...?

Monday, November 25, 2013

என்று தணியும் இந்தத் தேர்தல் தந்திர தாகம்...?


இந்த
தேர்தல் திருவிழாவில்
பரதேசி மக்கள்
கடவுள்களாக....
அங்கே
அய்யோ...பாவம்
அம்மா....அய்யா.....
ஈனக்குரல்களுடன்
கையில்
திருவோடுகளோடு
வாக்குப் பிச்சை எடுக்கும் 
அரசியல்வாதிகளோ
ஆகப் பரதேசிகளாக....

தெருவுக்குத் தெரு 
வீதிவுலா....
தேர்(தல்) திருவிழா 
அரசியல் பரதேசிகளோ
அழகான காரில் உலா....

இலவச  வேஸ்ட்டி 
இலவச சேலை
இங்கே எல்லோரும்
அம்மனமாகவா 
அலைகின்றார்கள்...?
அடப்....பாவிகளா 
அதையும் வாங்க 
அலையும் ஆண்டவர்கள் 

இந்த
தேர்தல் திருவிழாவில்
ஆடு முதல் கோழி வரை 
அத்தனையும் கலந்த
அசைவ விருந்து.......
அத்தோடு தேவ பானம் 
டாஸ்மாக் கடையிலிருந்து 

மக்கா.......
திருவிழா முடிந்ததும் 
மீண்டும் நீங்கள் பரதேசிகள் 
அவர்கள் கடவுள்கள் 
எங்கிருக்கிறார் 
எதுவும் தெரியாது...    

bharathi

என்று தணியும் 
இந்த தேர்தல் தந்திர தாகம்...?
என்று மடியும் 
இவர்கள் அடிமையின்  மோகம்?

என்றேமது மக்கள் 
அறியாமை விலங்குகள் போகும்?
என்றிவ ரின்னல்கள் 
தீர்ந்து பொய் யாகும்...?

பஞ்சமும் நோயும் 
என்றும் ஏழை மக்களுக்கோ...?
பாரினில் மேன்மைகள் 
அரசியல்வாதிகளுக்கோ....?

அட...அரசியல் உலகின் 
அபூர்வ சக்தியானவர்களே! 
வெற்றி யடைந்த பின் 
மக்களைக் கைவிடலாமோ?
தாயுந்தன் குழந்தையைத் 
தள்ளிடப் போமோ....?


               thanks-YouTube-by Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAIKandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1