google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: டிவிட்டரில் அரசியல் நையாண்டிக் கவிஞர் கமல்ஹாசன்

Wednesday, July 19, 2017

டிவிட்டரில் அரசியல் நையாண்டிக் கவிஞர் கமல்ஹாசன்


சிறுவயதிலிருந்து சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் அனைத்து துறைகளிலும்   சகலகலா வல்லவன்  என்பதை அறிவோம் கவிதை படைப்பதிலும் வல்லவர் 

‘‘தமிழகத்தில் அனைத்து நிலை களிலும் ஊழல் மலிந்துள்ளது.என்று பேட்டி அளித்த பிக்பாஸ் கமல்ஹாசன் மீது  
 எறியப்பட்ட  எதிர்மறை கருத்துக்களுக்கும் கவிஞர் கமல்ஹாசன் டுவிட்டரில் நையாண்டி கவிதை வடித்துள்ளார் 

--------------------------------------------------------------------------
இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தொழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை.

தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்

அடி பணிவோர் அடிமையரோ?
முடி துறந்தோர் தோற்றவரோ?

போடா மூடா எனலாம் அது தவறு

தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

அன்புடன்
நான்....
--------------------------------------------------------
#சொற்பொருள்: முதல் வரியில் - அதிமுக ஆட்சியை கலைப்போம் இனி யாரும் தகுதியானவர்கள் இல்லை என்றும்.

இரண்டாம் வரியில் - பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்பது போல் எழுவோம் மனதளவில் நாம் மன்னர் இல்லை என்றாலும்....

அடுத்த வரியில் - மன்னர் போல பதவி இல்லை என்றாலும் அடக்குமுறைக்கு எதிராக போரிடுவோம் தோற்று இறந்தால் நாம் வீரப்போராளி என பெயர் வாங்குவோம்..

 அடுத்த வரிகள்- அதே சமயம் நாம் ஒரு முடி எடுத்தால் நாம் முதல்வராகும் வாய்ப்பும் உண்டு..

அடுத்த வரிகள் - நாகரிகம் கருதி கருத்து கூறாமல் இருந்தால் அடிமை ஆகிவிடுவோமோ எனவும்.. ஆட்சியை இழந்தவர்கள் எல்லாரும் தோற்றவர்களாகிவிடுவார்களா என்ன என்று திரு.மு.க.ஸடாலின் அவர்கட்கு நன்றி தெரிவித்தும்..

அடுத்த வரிகள் - அவர்களைப் போல் நாகரிகமாக பேசாத்தெரியாமல் அவன் இவன் போன்ற ஒருமை வார்த்தைகளில் இவர்கள் பேசுவது தவறு..

அடுத்த வரிகள் - சினிமாவைத் தவிர்த்து அரசியல் அந்தளவிற்கு நான் அரசியலை தேடியதில்லை ஆனால் அந்த பாதையை தேடாமல் இனியும் விட்டுவிட்டால் அது தென்படாமலே போய்விடுமோ என்பதற்காகவே..

அடுத்த வரிகள் - என் நற்பணி மன்ற ரசிகர்களே தோழர்களே வாருங்கள் என்னுடன் மதிகெட்ட கூட்டத்தை ஒழித்து நாம் ஒரு இயக்கம் தொடங்குவோம் அதற்கு ஒரு அனுபவமிக்க  முனைவர் ஒருவரை தலைமை தாங்கச் செய்குவோம்..

என ஆசிரியர் இக்குறளில் மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்..

மேலும் அரசியலில் யாருக்கும் அமையாத ஒரு வாய்ப்பு அமைந்த தோழர் ரஜினிக்கும் ஒரு அழைப்பு உண்டு. நாளைய நாளிதழில் இதன் முழுவிவரமும் நீ தூங்கி எழுந்ததும் தெரியவரும் என தொடர்கிறார்..


உரையாசிரியர் - #கோபி_செல்வராஜ்
-----------------

அவரது கருத்துக் கவிதை ஆளும் மத்திய மாநில அரசுகளை எப்படி பயம் காட்டுகிறது என்பதை பாருங்கள்....

கமல் நடிக்கிறார்... அவருக்கு அரசியல் தெரியாது - எடப்பாடி பழனிச்சாமி


அரசியல் என்பது டுவிட்டரில் அல்ல என்றும், அது நிஜதளத்தில் உள்ளது 

அரசியலுக்கு வர துடிக்கும் கமல்;  எத்தனை சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தார்?: தமிழிசை கேள்வி


விஸ்வரூபம் படம் பிரச்சினையின் பொது வெளிநாட்டுக்கு ஓடுவேன் என்ற கமல்ஹாசன் முதுகெலும்பு இல்லாத கோழை முதுகெலும்பு இல்லாதவர் முதல்வர் ஆகமுடியாது -H ராஜா 

ஆயிரத்தெட்டு புளுகு மூட்டைகளை வைத்துள்ள கமலுக்கு எங்களைப் பற்றி பேச அருகதை இல்லை’-அமைச்சர் சி.வி.சண்முகம்
‘‘நடிகர் கமல் இதுபோன்று பேசுவது அவருக்கு தகுதியான தல்ல’’-அமைச்சர் செல்லூர் ராஜூ
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1