தமிழ் நெஞ்சங்களில் தேன் கவிதை மீட்டிய ஆனந்த யாழை
அழித்து விட்டான் காலன்
நா.முத்துக்குமார்............
ஆனந்த யாழை மீட்டி வைத்தாய் -எம்
அடி நெஞ்சில் தேனிசை வடிய வைத்தாய்!
திரைவானில் பாடல்கள் பாடிவைத்தாய்!-அதில்
தேன்சிந்தும் மழைத்துளி பொழிய வைத்தாய்!
உன் தமிழிசைப் பாடல்கள் மட்டும் போதுமே
உலகில் பாடல்கள் எதுவும் தேவை இல்லை!
உன் எழுத்தெல்லாம் தமிழின் அழகே!
உன் பிரிவால் தமிழும் இன்று அழுதே!
உந்தன் பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன் அய்யா
அது போதவில்லை இன்னும் வேண்டும் அய்யா
இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
உன் போல் அழகை திரையில் பாடவில்லை
ஆனந்த யாழை மீட்டி வைத்தாய் -எம்
அடி நெஞ்சில் தேனிசை வடிய வைத்தாய்!
திரைவானில் பாடல்கள் பாடிவைத்தாய்!-அதில்
தேன்சிந்தும் மழைத்துளி பொழிய வைத்தாய்!
திடிரென்று எம்மை விட்டு பிரிந்து விட்டாய்-எம்
கண்களில் கண்ணீர்த்துளி பொழிய வைத்தாய்!
இந்த மண்ணில் உன்போல் யாருமிங்கே
என்றும் இனி பாடப் போவதில்லை
என்று இன்று தோனூதய்யா!
ஆனந்த யாழும் முத்துக்குமாரும்
https://kavithaivaanam.blogspot.in/2013/09/aanandayaazhum-muthukumarum.html?m=0
கவிஞர் நா .முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம்...
http://sinthanaivathi.blogspot.in/2016/08/letter-muthukumar.html?m=1
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |