google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அங்கதக்கவி ஞானக்கூத்தன்

Tuesday, August 2, 2016

அங்கதக்கவி ஞானக்கூத்தன்




திருவல்லிக்கேணியில் மகாகவி பாரதியார் மறைந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் 20 பேர் கூட வரவில்லை என்பார்கள் ஆனால் என்ன ஆச்சரியம் அதே திருவல்லிக்கேணியில் எழுத்தாளர்களை யானை மீது ஊர்வலம் அழைத்துச்சென்று கொண்டாட வேண்டும்  கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்த போது 20 பேர் வந்து கலந்துகொண்டனர் 
இது இங்கு மட்டுமல்ல இதுதான் உலகம் முழுக்க (வாழ்ந்து) மடிந்த  கவிஞர்களுக்கு கிடைக்கும் மரியாதை

அதற்காக கவிஞர்கள் யாரும் தங்கள் எழுதுகோலை தூர எறிந்து விடுவதில்லை  புதுப் புது பாதைகளில் பயணிக்க தவறுவதில்லை 

கவிதைகளில்புதிய பாடுபொருட்களை தேடிப்பிடித்து  புதியப்பார்வையுடன் நவீன அங்கதக் கவிதைக்கு பயணித்தவர் கவிஞர் ஞானக்கூத்தன்

தமிழ்

‘‘எனக்கும் தமிழ்தான் மூச்சு...
ஆனால்,

அதைப் பிறர் மீது விடமாட்டேன்!’’


திராவிட இயக்கத்தின் எழுச்சி பற்றி முரண்பட்ட  கருத்து உள்ளவர்களிடமும் அமைதியாக விவாதிக்கும் பண்பு அவரிடம் இருந்தது. 



 அரசியல்,கடவுள்,பாசம்,பிரிவு பற்றிய இவரது நையாண்டி,அங்கதம் மிக்க படைப்புகள் ‘கசடதபற’ இதழின் மூலம் வெளிப்பட்டு தமிழ் கவிதை உலகில் ஒரு தனி உத்தியாகவே அமைந்தது.

அவரது கவிதைகளில் சில 

பாதுகாப்பு .....
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை 

வெங்காயம் 

மத்திய ஆசியாவில்
முதன் முதல் பிறந்து பின்பு
பலபல விண்ணும் மண்ணும்
பார்த்ததாம் இவ்வெங்காயம்.

பலபல விண்ணும் மண்ணும்
பார்த்தபின் எதனால் இன்றும்
குடுமியை வெங்காயங்கள்
கைவிட மாட்டேன் என்னும். 

கடவுளே இவரது கவிதையை படிக்க நேர்ந்தால் மெல்லியப் புன்னகையுடன் கடந்து செல்வார்

‘‘மனிதர் போற்றும் சாமிகளில்
ஒற்றைக் கொம்புக் கணபதியை
எனக்குப் பிடிக்கும். ஏனெனில்,
வேறெந்த தெய்வம் வணங்கியபின்
ஒப்புக்கொள்ளும் நாம் உடைக்க?’’


தலையணை

விழுவதால் சேதமில்லை
குலுக்கினால் குற்றமில்லை
மூலைகள் முட்களல்ல
உருவமோர் எளிமையாகும்

வாழ்க்கையில் மனிதன் கண்டு
பிடித்ததில் சிறந்ததாகும்
தலையணை. அதற்குள் ஒன்றும்
பொறி இயற் சிக்கல் இல்லை


நம்பிக்கை& 


பசித்த வயிற்றுடன்
சுற்றிலும் பார்த்தான்
பார்வையில் பட்டன பற்பல
தாவரம்
ஒன்று ஆல். ஒன்று அரசு
ஒன்று வேம்பு…


அவனுக்கு வேண்டிய
ஒன்றோ
நாற்றங்காலாய் இன்னமும்
இருந்தது.


இப்படி நிறைய படைப்புகள் மூலம் நம்மிடம் வாழ்ந்த  கவிஞர் ஞானக்கூத்தன் இன்று இல்லை என்றாலும் நம்மை விட்டு என்றும் மறையாது அவரது கவிதைகள்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1