google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அப்பா - சினிமா விமர்சனம்

Monday, July 4, 2016

அப்பா - சினிமா விமர்சனம்


இது #அப்பா படத்தின் விமர்சனம் மட்டுமல்ல
 #அப்பா படம் பார்த்த ஒரு அப்பாவின் மனகுமுறல்!!!

எப்படி இயற்கை வளங்களை எல்லாம் சுரண்டி விடுகிறதை... 

எப்படி அயலான் கொள்ளை கொள்ளும் அயோக்யதன திட்டங்களை......

 வளர்ச்சி பாதையில் இந்தியா என்று சொல்கிற அரசு போலவே...


எந்த வாழ்வியல் அடிப்படை கூறுகளும் அற்ற இன்றய வணிக அடிமைகளை உருவாக்கும் கல்வியை தரமானது என நம்பி உலகமயமோகம் கொண்டு அலையும் அப்பாக்களை...

 அதன் ஆணிவேரை பதம் பார்த்த திரைப்படம் தான் #அப்பா 


சாராய வியாபாரிகளெல்லாம் கல்வி தந்தையாமாறி இருக்கும் அவல நிலையை தோலுரித்து காட்டுகிறான்  #அப்பா 

நான் எனது குடும்பத்துடன் குறிப்பாய் என் குழந்தைகளோடு சென்று பார்த்தேன் மார்க் பற்றி பேசும் வசனம் வரும்போதெல்லாம் குழந்தைகள் விம்மி கொண்டு கை தட்டுவதை பார்த்துக் கலங்கித்தான் போனேன் 

வருங்கால ஆளுமை மிக்க தலைமுறையாக வளர வேண்டியவர்கள் பந்தய குதிரைகளாக மாறும் மாற்றும் பெற்றோர்களின் அறியாமையை எங்கனம் கலைவது..,?

 பொருளாதாரத்தை தீர்மானிக்கும் ஆங்கில மொழி அவசியமே எனக்கும் மாற்று கருத்து கிடையாது அதற்காக தாய் மொழியில் சிந்திக்கும் போது ஒரு குழந்தை பூரண அறிவாற்றலை பெறுகிறது என அறிவியலும் கூறுகிறது அறிஞர்களும் கூறுகிறார்கள் 


ஆனால் இங்கே என்ன நடக்கிறது இரண்டு மொழிகளிலும் தெளிவற்ற ரெண்டும் கெட்டான்களை உருவாக்கி வருகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை 

இந்த காலகட்டம் பிள்ளைகளை திருத்த வேண்டிய காலகட்டம் அல்ல பெற்றோர்கள் மட்டுமே திருந்த வேண்டிய கால கட்டம் 

எனக்கென்று ஒரளவின் பொருளாதார பலம் இருந்த போதும் என் பிள்ளைகளுக்கு நான் நாமக்கல் நாமம் போடவில்லை என் இரு குழந்தைகளுமே அரசு பள்ளியில் தான் படிக்கிறார்கள்

 மரபுள்ள நாட்டு கோழியாய் புன்னகை மாறாமல் வீரியம் குறையாமல் வளர்கிறார்கள் என்பதை இங்கு பெருமை பட கூறிக் கொள்ள விரும்புகிறேன்


 என் பிள்ளைகளுக்கு தமிழ் கண்ணாக திகழ்கிறது ஆங்கிலம் பிறரோடு தொடர்பு கொள்ள உதவும் கண்ணாடியாக பயன்படுகிறது அவ்வளவுதான்


 சமூக மாற்றத்திற்கான எல்லா வித்துக்களையும் தன்னகத்தோ கொண்டுள்ளது #அப்பா திரைப்படம் 


ஆம் மழலைகளை மலையாக உயர்த்துவதும் மடுவாக மாற்றுவதும் அப்பாக்களின் கையில்தான் உள்ளது

நன்றி - தவம் தவமனிராஜா 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1