google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டரில் கடவுள் (@real_kadavul)

Monday, April 13, 2015

ட்விட்டரில் கடவுள் (@real_kadavul)

சமுக வலைத்தளம் ட்விட்டரில் சமீபத்தில் கடவுள்@real_kadavul என்ற பெயரில் பதிவிடும் குறும் பதிவுகள் அனைத்தும் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கின்றன 

ட்விட்டரில் கடவுள் வந்த ஒரு மாத காலத்தில் அவருக்கு மூன்று ஆயிரத்திற்கும் மேல் பாலோவேர்ஸ் இருப்பது ஆச்சரியமே அவர் மிக குறைந்த ட்விட்கள் பதிவிட்டிருந்தாலும் அனைத்தும் அதிக மறு பதிவு (RT) ஆகியிருப்பது அவரது பதிவில் உள்ள நையாண்டித்தனத்தையும் பகடியையும் பிரதிபலிக்கிறது 

"நானும் உங்கள 60000 வருசமா பாத்துட்டுதான்டா இருக்கேன் ஒருத்தன்கூட தேர மாட்டீங்க" என்று அதிரடியாக தனது சுயவிவரத்தை சொல்லும்  கடவுள் (@real_kadavul) தனது இருப்பிடமாக "எங்கேயும்" என்று சொல்லியிருப்பது யதார்த்தம்

இந்து மதக் கடவுள் சிவன் படத்தை தனது dp ஆக வைத்திருந்தாலும் அவரது பதிவுகளில் எந்த வேற்று மதத்தையும் கேலி செய்வதும்  இல்லை குறை சொல்வதும் இல்லை அதே நேரம் அவரது பதிவுகளில் நாத்திக வாடை அதிகம் 

my bro @thetweetofgod என்று அவர் குறிப்பிடும் GOD என்ற ஆங்கில ட்விட்டர் 1.85 M Followers உடன் உலகப் பிரபலமானவர் அவரை தொடர்பவர்கள் பல சினிமா,அரசியல் பிரபலங்கள் என்பது ஆச்சரியம் இருவரது ட்விட்களும் சமுக அரசியல் சினிமா அவலங்களை சாடுவது சிறப்பு 


இங்கே  கடவுள் (@real_kadavul) பதிவிட்டுள்ள சில குறும் பதிவுகளைப் பார்ப்போம் 



கடவுள் @real_kadavul 
இந்திய விமானங்கள் காணாமல் போவதில்லை,
மலேசியர்கள் அலட்சியம்

கடவுள் @real_kadavul 
இந்தியாவில் இருந்த சைகோ கொலைகாரர்கள்அனைவரையும் இந்த ஜென்மத்தில் தெலுங்கு சினிமா எடுக்க அனுப்பியுள்ளேன்

கடவுள் @real_kadavul 
ஹெல்மெட் போடாம போய் மண்டைய உடைச்சுகிட்டு என்னிடம் வரும் RIP ரெக்வஸ்டுகள் நிராகரிக்கபடும்

கடவுள் @real_kadavul 
எனக்கு அவ்ளோ பெரிய கோவில் கட்டிய ராராஜனைவே 43 வயசுல போட்டு தள்ளிட்டேன் ஐந்து ரூபாய் அர்ச்சணை சீட்டு நீயெல்லாம் எம்மாத்திரம்
கடவுள் @real_kadavul 
நாத்திகர்கள் மீது கோபம் எதுவும் இல்லை இந்த கமல் மீதுதான் சற்று கோபம்.அவன் பேசுவது சில தருணங்களில் எனக்கே புரிவதில்லை

கடவுள் @real_kadavul 
நீங்கள் எல்லோரும் இந்த நூற்றாண்டில் அறிவு மிகுந்தவர்களாக வருவீர்கள் என்று வாழ்த்தி முடிப்பதற்குள் மோடியை பிரதமராக்கி விட்டீர்கள்

கடவுள் @real_kadavul 
உங்களுக்கு ஆறு அறிவு வேறு ஒரு கேடு
கடவுள் @real_kadavul 
என் பழைய உடுக்கை ஒன்றில் சத்தம் அதிகமாக வந்ததால் அதை டி.ராஜேந்தர் வாயில் வைத்து அழுத்தி பூமிக்கு அனுப்பிவிட்டேன். ஓம்

கடவுள் @real_kadavul 
பால் விலையும் கம்மியா வேணும் ? மாட்டுகறியும் வேணும்னா எப்படிடா? ...இங்க நந்தி வேற பயந்து நடுங்குறான்

கடவுள் @real_kadavul 
எதிர்காலத்துல என்ன நடக்கும்னு தெரிஞ்சா ஒருத்தன்கூட கல்யாணமே பண்ணமாட்டீங்க, ஒருத்தன் மேட்ச் என்ன ஆகும்னு கேக்கறான்
கடவுளே நயன்தாராவ யாரு கல்யாணம் பன்னுவா???;-)"
கடவுள் @real_kadavul 
அது மட்டும் எனக்கே தெரியாது மகனே "

கடவுள் @real_kadavul 
"லிங்கா நூறாவது நாள் கொண்டாட்டம்" இந்த கொடுமைகளை பார்க்க கூடாது என்றுதானே நான் பூமிக்கு வருவதில்லை

கடவுள் @real_kadavul 
கேக்க வந்த எல்லா வேண்டுதலையும் மறந்துட்டு "வெளிய விட்டுவந்த செருப்பு இருக்கனும் கடவுளே"ன்னு மட்டும் வேண்டிட்டு போணவனெல்லாம் இருக்கான்

கடவுள் @real_kadavul 
கஷ்டம் வரும்போது மட்டும் "கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை"ன்னு கேக்குறியே. என்னைக்காவது சந்தோசமா இருக்கும்போது அப்படி கேட்டிருக்கியா.

கடவுள் @real_kadavul  
எனக்கும் கோயிலில் நீங்கள் கொடுக்கும் காசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை,ஏன் முக்கியமாக எனக்கும் உங்கள் பிரச்சணைக்குமே எந்த சம்மந்தமும் இல்லை.
கடவுள் @real_kadavul 
கர்மா என்பது சினிமா நடிகனை பார்த்து அப்பன்கள் காமராஜரைத் தோற்கடித்தார்கள் அது அவர்களின இஞ்சினியர் பிள்ளைகளை நாசம் செய்துவிட்டது.

கடவுள் @real_kadavul 
எவ்ளோ பாவம் வேணும்னாலும் செஞ்சிக்கோ..வரும்போது இந்த தேவிஸ்ரீபிராசத்த மண்டையில ஓங்கி ஒரு கொட்டு கொட்டிட்டு மட்டும் வரவனுக்கு சொர்க்கம்

கடவுள் @real_kadavul 
உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்பேர் பாம்பு கடிச்சு சாவுறான்.பாம்புங்கதான்டா உங்களுக்கு பால் ஊத்திட்டு இருந்திருக்கு. 

கடவுள் @real_kadavul 
தெலுங்கு ரசிகர்கள் தேசிய விருதிற்காக காத்திருப்பதும் பங்களாதேஷ் ரசகர்கள் வோர்ல்ட்கப் ஜெயிக்க காத்திருப்பதும் என்னை பரவச நிலை அடையச்செய்கிறது

கடவுள் @real_kadavul 
ஆஸிக்கு சப்போர்ட் செய்யும் இந்தியரை யாரும் கேவலமாக பார்க்க வேண்டாம் அவர்கள் போன பிரவியில் மெல்போர்னில் பிறந்து கங்காரு சாணி அள்ளியவர்கள்தான்

கடவுள் @real_kadavul 
பலர் இறந்த ஒரு பெரிய விபத்தில் தப்பித்த ஒருவன் சொல்கிறான் "கடவுள்தான் என்ன காப்பாத்துனாரு".ஆமா செத்தவன் பூராம் என்ககு வேண்டாதவ்ன பாரு...
கடவுள் @real_kadavul 
பிச்சைகாரனுக்கு பெரிய பெரிய நோட்டா பிச்சை போடாதீஙப்பா.அதை பார்க்கும் ஏழை விவசாயி "உன்னைய நம்புனதுக்கு பிச்சை எடுக்கலாம்னு" என்னைய திட்டுறார்
இப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் இந்த ட்விட்டை RT செய்து ட்விட்டர் கடவுளை பெருமைப்படுத்துங்கள்.........



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1