google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கோடம்பாக்கத்தில் ஒரு பரதேசி

Thursday, October 30, 2014

கோடம்பாக்கத்தில் ஒரு பரதேசி

கோடம்பாக்கம்  என்பது சினிமா பிரபலங்களும் செல்வ சீமான் சீமாட்டிகளும் வாழும் உலகம்...இங்கே யாரடா அந்தப் பரதேசி? என்று கேட்க தோன்றுகின்றதா......அது வேறு யாருமில்லைங்க நான் நானேதான் ஹி..ஹி...
எனக்கு சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாக அப்பாவிடம் பொய் சொல்லி ரூ.400 வாங்கிக்கொண்டு பொத்தடீர் என்று வந்து குதித்துவிட்டேன் சென்னை பாரிஸ் கார்னர் பஸ் ஸ்டாண்டில்.........1983 ஆம் ஆண்டு.
எல்லாம் மனதில் ஒரு நம்பிக்கைத்தான்  வந்தாரை வாழவைக்கும் சென்னை நம்மளை என்ன கைவிட்டுவிடுமா...? என்று தெரிந்தது...அடடா...இது நம்ம ஊரு மாதிரியில்ல...இங்க அம்புட்டுபேரும் பரதேசிகள்தான்...பணக்கரன்மாதிரி நடிக்கிராயிங்க
எத்தனையோ  உறவினர்கள் சென்னையில் இருந்தாலும் அத்தனை பேரும் வியாபாரிகள்...அதனால் அவியிங்ககிட்ட போனால் நம்மளால என்ன லாபம்?...னு கணக்குப் போடுறவிங்க..அதனால் ஆழ்ந்த யோசனையில் பாரீர் கார்னர் பெரிய பேருந்து நிலையத்திலையே இருட்டும் வரை இருந்துவிட்டு....
எப்பவோ என் கூட படித்த உறவினர் சூளைமேட்டில் பாத்திர கடை வைத்த நினைவு வந்து அவரை தேடிப்போனேன்.....நான் போய் சேர்ந்தப் போது அவரும் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்....பக்கத்திலிருந்த போட்டிக்கடையில் வீட்டு விலாசம் வாங்கி அப்படா....ஒருவகையாக போய் சேர்ந்தேன்
அவர்கள்  அண்ணன் தம்பிகள்  எல்லோரும் ஒரு மொட்டை மாடியில் குடிசை போட்ட கூடாரத்தில் வாடகைக்கு தங்கியிருக்க....அங்கேயும் இட நெருக்கடி அப்போது அவர்கள் மூலம் ஒரு பரதேசியின் அறிமுகம் ........மணலியில் ஓர் உரக்கம்பேனியில் வேலைசெய்து சஸ்பென்டில் இருக்கும் பரதேசி அவருக்கு கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் பிள்ளையார் கோயில் எதிரிலிருக்கும்  அரசு (SINGLE PERSON QUARTERS) விருந்தினர் விடுதியில் மாதம் ரூ.100/-கூட கொடுக்க முடியாமல் பிப்டி பிப்டி ஷேர் பண்ணிக்கொண்டு போய் குடியேறினேன்....
அங்கே பார்த்தால்...அம்புட்டு சினிமாக்காரங்களும் அங்கேதான் இருந்தாயிங்க ...இன்னும் இருக்கிராயிங்க
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1