google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அதிமுகவின் தேர்தல் சக்ஸஸ் மீட்

Tuesday, May 13, 2014

அதிமுகவின் தேர்தல் சக்ஸஸ் மீட்


சினிமாக்காரர்கள் படம் ரீலிசான அடுத்த நாள்தான் கேக் வெட்டி சக்ஸஸ் மீட் வைப்பது போல தேர்தல் முடிந்த அடுத்த நாளே அதிமுக தேர்தல் சக்ஸஸ் மீட் வைத்தால்  எப்படியிருக்கும்? என்ற கற்பனை நகைச்சுவை பதிவு....

நள்ளிரவுவரை  அதிமுகவின் சக்ஸஸ் மீட்  நடப்பது கோடநாட்டிலா..?  போயஸ் கார்டன் வீட்டிலா...? என்ற குழப்பத்தில் தவித்த அதிமுக அமைச்சர்களுக்கு இன்று விடியும் போதுதான் விமோச்சனம் வந்தது....எம்ஜிஆர் சமாதியில் என்று


இன்று அம்மா கோடநாட்டிலிருந்து  ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக எம்ஜிஆர் சமாதிக்கே வருவதால் இடையுறாக இருந்த கண்ணகியை   ஒருநாளுக்கு வேறு இடத்தில் போய் நிற்கும் படி அமைச்சர்கள் கெஞ்சி கூத்தாட........

கண்ணகி அம்மணியும் எதற்கடா வம்பு என்று அப்படியே நகர்ந்து போய் கிரிகெட் ஸ்டேடியத்தில் ஓடி மறைந்துக் கொண்டாள்

பிரதமர் அம்மா அவர்களே வருக பிரகாசமான ஆட்சியை தருக என்று பல்வேறு பிளெக்ஸ் பேனர்களை (போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் note this point Mr.Traffic Ramasamy) மல்லாக்க ஆகாயத்தைப் பார்த்து படுக்க  வைத்து அமைச்சர்கள் காத்து நிற்க..........

இரட்டை இலை சின்னமும் 40 மெழுகுவர்த்திகளுடன் 40 அடி உயரத்தில் நாற்பதும் நமக்கே என்று எழுதப்பட்ட மிகப் பெரிய கேக் எம்ஜிஆர் சமாதி வாசல் முன்பு இருக்க அம்மா ஹெலிகாப்டரில் பறந்தபடியே கேக்கை வெட்டுவதுதான் மாஸ்டர் பிளான் 

அமைச்சர்கள்  எல்லோறும் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்க அம்மா வரும்   ஹெலிகாப்டர்எம்ஜிஆர் சமாதி மீது வட்டமடித்தது........
அம்மா! தாயே! என்று  தொண்டர்கள்  கைகளை உயர்த்தி உச்ச ஸ்தாயில் கூவ...அமைச்சர்கள் அப்படியே தரையில் குப்பற விழுந்து வணங்கினார்கள் 

ஆகாயத்தில் பறந்தபடியே அம்மா ரிமோட் கண்ட்ரோல் மூலம் நாற்பது மெழுகு  வர்த்திகளையும் ஏற்றி...........சிறிது நேரம் எரியவிட்டார்கள் பிறகு தம் புடித்து புஸ் என்று ஊதினார்கள் எல்லாம் அணைந்துவிட்டது 

ஆகாயத்தில் பறந்த படியே ஒரு நீள பட்டாக்கத்தியை எடுத்து கேக்கை வெட்ட...........

அதிமுகவின் தேர்தல் சக்ஸஸ் மீட்  இனிதே சிறப்பாக முடிந்தது.



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1