google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மோடி Vs கெஜ்ரிவால்-ஜெயிக்கப்போவது யாரு?

Sunday, March 16, 2014

மோடி Vs கெஜ்ரிவால்-ஜெயிக்கப்போவது யாரு?

பாஜக பிரதம வேட்பாளர், உத்தம வில்லன் நரேந்திர மோடியும்  ஆம் ஆத்மியின் ஆல்-இன்-ஆல் அழகுராஜா, ஊழல் ஒழிப்பு மாயாவி அரவிந்த் கெஜ்ரிவாலும் நேருக்கு நேர் எதிர்த்து வாரணாசியில் போட்டியிட்டால்....



நரேந்திர மோடியின் கதையோ...... கட்சியில் இருந்த பெரிய தலை அத்வானியை அலேக்காக கீழே தள்ளிவிட்டு நானோ காரில் ஏறிக்கொண்டு அடுத்த பிரதமர் நானே என்று வீர முழக்கமிட...

மோடி  அய்யா நீவீர் நல்லவரா? கெட்டவரா? என்று அவர்கள் கட்சிக்குள்ளேயே ஆயிரம் பட்டி மன்றங்கள் நடக்க......

அரவிந்த்  கெஜ்ரிவாலின் கதையோ..... காங்கிரஸின் உழலுக்கு எதிராக உண்ணாவிரம் இருந்த அண்ணல் காந்திஜியின் அவதாரமாக காட்டிக்கொண்ட அன்னா ஹசாரேவை தள்ளிவிட்டு ஆம் ஆத்மி கட்சி துவங்கி.......

ஊடகங்களின் தோளில் அமர்ந்து அதிரடியாய் டெல்லியில் ஆட்சியைப் பிடித்து கோமாளித்தனங்கள் பல செய்து கோட்டையை கோட்டைவிட்டு இன்று அந்த   ஊடகங்களையே உள்ளே தள்ளுவேன் என்று மிரட்டும் அரசியல்  காட்டுப்பூச்சியாக.........

கெஜ்ரிவால்  அய்யா நீவிர் அறிவாளியா? கோமாளியா? என்று அனைவரும் சிண்டைப் பியித்துக்கொள்ள வைத்துவிட்டீரே.......


என்  பார்வையில்..........
பல  இனம் மொழியால் பிரிந்துகிடக்கும் இந்தியாவில் இனி தனி ஒரு கட்சி முதன்மை பெறாது......அந்த அந்த மாநில மக்களே தங்களுக்கு நல்லது செய்வோரை தேர்ந்தெடுப்பார்கள்...அவர்கள் ஒன்றிணைந்து ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்பதே ஆகும்..

சாப்பாட்டு ராமன்கள் மோடியும் கெஜ்ரிவாலும்  அவர்கள்  அருகில் அமர்ந்து  சாப்பிட காசு வசூலிப்பதை பார்த்தால் அடங்..கொய்யால நம்ம நித்யானந்தா சாமிகளே பரவாயில்லை

எனவே காங்கிரஸ்-பாஜக-ஆம் ஆத்மி கட்சி இவர்கள் இல்லாமல் மூன்றாவது அணியில் அதிக இடங்களை பெறுவோர் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளது....

உங்கள் பார்வையில்..............
மோடி- கெஜ்ரிவால் மோதிக்கொண்டால் இவர்களில் ஜெயிக்கப்போவது யாரு....?


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-20/3/2014
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1