google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மிகவும் அழகான விஷயம் எது?

Thursday, November 28, 2013

மிகவும் அழகான விஷயம் எது?


இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் அழகான விஷயம் எது? என்று உங்களிடம் யாரேனும் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்....? அவரவர் விரும்பி நேசிக்கும் ஒன்றைத்தான் அழகான விஷயம் என்பார்கள் 



Made with .freeonlinephotoeditor.com  
ஓர் அன்னையிடம் கேட்டால் அவள் பெற்ற குழந்தையைத்தான் சொல்வாள் அதிலும் தன் முதல் குழந்தையே மிகவும் அழகான விஷயம் என்பாள் அப்படித்தான் ஒரு தந்தையிடம் கேட்டால் அவரும் அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் அதுவே ரொம்ப அழகான விஷயம் இது எதிர்மறை ஈர்ப்பு 
Made with .freeonlinephotoeditor.com
காதலனுக்கு காதலியையும் காதலிக்கு காதலனையும் ரொம்ப அழகான விஷயங்களாக தெரியும் ஆனால் அது கல்யாணத்தில் முடிந்துவிட்டால் ரொம்ப அழுகையான விஷயமாக மாறிவிடும்  

சாப்பாடு பிரியர்களுக்கு சாப்பாடு இயற்கையை நேசிப்பவர்களுக்கு மரம்,செடி,கொடி...இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்


அனால் உண்மையில்....

"உலகின் சிறந்த மிகவும் அழகான விஷயங்களைப் பார்க்கவோ தொடவோ முடியாது அவைகளை இதயப்பூர்வமாக மட்டுமே உணரமுடியும்".......... என்று சொன்னவர் ஹெலன் கெல்லர் 

உலகப் பிரசக்தி பெற்ற இந்த வார்த்தைகளை விதைத்த.........
யார் இந்த  ஹெலன் கெல்லர்........?

1880-ஆம் ஆண்டு பிறந்த ஹெலன் கெல்லர் 19 மாதக் குழந்தையாக இருக்கும் போது வந்த நோயின் தாக்கத்தால் தன் பார்க்கும் சக்தியையும் கேட்கும் தன்மையையும் இழந்த போதிலும்  தனது விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் இளங்கலை பட்டம் வென்ற உலகின் முதல் அமெரிக்கப் பெண்மணியாவார் என்பதை நாம் அறிவோம் அதுமட்டுமல்ல அவர் ஓர் அமெரிக்க எழுத்தாளர், அரசியல் ஆர்வலர்,உலக தொழிற்சாலை தொழிலார்களின் சோஷலிச கட்சி உறுப்பினர் ஆவார் 

இவர் தன் வாழ்நாளில் உலகமுழுக்க பயணித்து பெண்கள் வாக்குரிமை,தொழிலாளர்கள் உரிமை....போன்றவற்றுக்காக பாடுபட்டார் 

இவரது மிகவும் அழகான விஷயம் எது? என்ற இந்தக் கருத்தை ஆதரிக்காதவர்கள் அன்றும் இன்றும் யாருமில்லை....அவரது இந்தக் கருத்து உலகெங்கிலும் பல விதங்களில் தாக்கம் செய்துள்ளது
அவரது கருத்தில் ஒரு காதல் குறும்படம் கண்டேன்...ரசித்தேன் 


                           thanks-YouTube-by Cameron CovellCameron Covell·

இந்தக் காதல் குறும்படம்  நிக் லோபஸ்-அனலிசா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க எழுதி இயக்கியவர் கேமரூன் கோவல் இந்தக் குறும்படம் LACHSA 2012  சிறந்த நடிகருக்கான விருதும் சிறந்த குறும்படம் விருதும்  பெற்றுள்ளது 
அழகு சிரிக்கின்றது............
                          thanks YouTube -Theive Paadagar TMSounderarajan
 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1