google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஆதலால்..கவிதை செய்வீர்!

Sunday, October 20, 2013

ஆதலால்..கவிதை செய்வீர்!


அந்தக்  காலத்தில் வேறு பொழுதுபோக்கு ஊடகங்கள் எதுவும் இல்லை...எழுதுவதும் எளிதாக இல்லை...அதனாலே கவிதை எழுதியவர்கள்  பல பணமரங்களை மொட்டையடித்து பண ஓலையில் எழுத்தாணி கொண்டு குத்திக் கிழித்துப் பக்கம் பக்கமாக...சாரி...ஏடு ஏடாக  காவியங்கள் எழுதி...அண்ணலும்  நோக்கினார் அவளும் நோக்கினாள் என்பதற்குள் பல ஆயிரம் வரிகள் பாடிமுடித்தனர்.........



freeonlinephotoeditor

ஆனாலும் அந்தக் காலத்திலேயே சுருங்கச் சொல்லி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் நிறையப் புலவர்கள் 
(அட..அவியிங்களுக்கு எழுத்தாணி கொண்டு எழுதத் தெரியவில்லை என்று நினைக்காதீர்கள்)

ஒரே வரியில்  உள்ளத்தைக் கொள்ளைகொண்ட இந்த உலக மாந்தர்களின் வாழ்வியல் தத்துவத்தை....
அறம் செய்ய விரும்பு என்று ஆத்திச்சூடியில் தொகுத்து சொன்ன  ஒளவை மூதாட்டிக்கு அன்றே அழிவில்லா ஜீவன் தரும் நெல்லிக்கனி  பரிசு கிடைத்தது....இன்றுகூட நாசா நுழைவாயிலில் கற்றது கை மண் அளவு,கல்லாதது உலகளவு என்ற ஒளவையாரின் கூற்றுதான் மெய்யாகப் பதிக்கப்பட்டுள்ளது.......

http://farm1.static.flickr.com/222/490084997_20f0a840dc.jpg

இரடியில் மனித வாழ்வின் முப்பெரும் நிகழ்வுகளை நிதர்சனமாக எல்லாக் காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவாகச் சொல்லிச் சென்ற அய்யன் வள்ளுவரையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் யாரும் மறக்கவில்லை ....இன்றும் அவர் எழுச்சியுடன் முக்கடல் சங்கமிக்கும் குமரியில் மிகப் பெரிய சிலையாக.........

இப்போது மின்னல் வேக கணணி காலம்.....எங்கு நோக்கினும் பொழுது போக்கு ஊடகங்கள்  இப்போதும்  நீங்கள் பொழுதுபோக்காக எதையாவது பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருந்தால் யார் படிப்பார்கள்

ஆதலால்.....கவிதை செய்வீர்!
அதுவும்  அளவாக எழுதுவீர் 
அதிலும் மனிதர்களைப் பாடுவீர்-என்றும் 
அழியாப்  புகழ் பெறுவீர் 


                                thanks-YouTube-by RAMESH BABU 


(சாமியோவ்....
இது நான் சும்மாங்காட்டியும் எழுதிப்பார்த்தேனுங்கோ....
இதெல்லாம் ஒரு கவிதையா...?  என்று யாரும் சண்டைக்கு வந்திடாதிங்கோ....இது நீங்களும் கவிதை எழுதலாம்-2 )
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1