google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வருத்தப்படாத வலைப்பதிவர் சங்கம்

Thursday, September 12, 2013

வருத்தப்படாத வலைப்பதிவர் சங்கம்


அண்ணேன்...
நான் இனிமையானவன்
ரொம்ப உயர்ந்தவன்
அந்த உண்மையைச் சொல்லுறேன்...கேளுங்க.



நான் நல்லவனா...? கெட்டவனா...?
அதுலாம் எனக்குத் தெரியாதுங்க 
ஆனால் இனிமையானவன் 
சுபாவத்தில இல்லைங்கோ 
உடம்பில.........
டாக்டர் சொல்லிப்புட்டாரு 
உனக்குச் சக்கர உடம்புல அதிகம் 

அதையே நினைச்சி.....
என்னத்த திங்குறது...?
என்னத்த திங்கக் கூடாது...?
பெரிய ஆராயிச்சி  பண்ணி....
ரொம்ப டென்சனும் வந்துடுச்சிங்க 

இன்னுமொன்னுங்க...
நான் ரொம்ப உயர்ந்தவனாம் 
வளர்சியில இல்லிங்கோ 
என் இரத்த ஓட்டத்திலயாமுங்கோ 
ஹை பிளட் பிரஷர்..

அதுக்கும் 
அந்த மருத்துவர்தான் சொன்னாருங்கோ 
நான் பார்க்கிற வேலைக்கு 
எல்லாம் வருமுங்கலாம் 
ரிலாக்ஸ்....பிளிஸ் 

அதுக்கு நான் என்னங்க பண்ணமுடியும்..?
ஊட்டில போய் உக்கியா போடமுடியும்....?
கிடைக்கிற கேப்ல 
வலைதளங்கள வாசிச்சேங்க..
அப்புறம் நானும் எழுதிப் பார்த்தேனுங்க...
அதுலதான் வந்ததே சிக்கல் 
அவியிங்களுக்குனு 
ஆயிரம் ரூல்ஸ் வச்சியிருக்கிராயிங்க...

அதனால நானே ஆரம்பிச்சிட்டேன் 
அதுதான் இந்தப் பிளாக்கருங்க....... 
இப்ப அந்தப்  பிரசருலாம் 
பிரச்சனையே இல்லையிங்க..

http://mediad.publicbroadcasting.net/p/shared/npr/styles/card/nprshared/201306/190722556.jpg

அதனால 
அன்பர்களே! நண்பர்களே!
உங்கள்  மன உளைச்சலை 
விரட்டியடிக்க....
நம்ம வருத்தப்படாத வலைப்பதிவர் சங்கத்துல 
நீங்களும் வந்து சேர்ந்துடுங்க...மக்கா 



இங்கே தலீவருனு  யாரும் கிடையாது 
நாம எல்லோரும் தலீவர்கள்தான்  
நாம இப்படி யாரு வாலயும் பிடிக்க வேண்டாம் 
நாம இப்படி யாரு காலயும்  பிடிக்கவேண்டாம்

வருத்தப்படாத வலைப்பதிவர் சங்கம் 

இங்கே பதிவு பண்ணுங்க.......



Icon Icon Icon
 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1