google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இதுதான் நாட்டின் பொழுதுபோக்கா?

Thursday, August 29, 2013

இதுதான் நாட்டின் பொழுதுபோக்கா?

 (எங்கள் நாடு இந்தியா....எங்கள் பொழுது போக்கு என்ன...? தெரிந்துகொள்ள வேண்டுமெனில்....)


வலைதளங்களில் அதிலும் கூகுள் செய்திகளில் பொழுதுபோக்கு பிரிவில் வரும் செய்திகள்....வித்தியாசமாக இருக்கும் உ.ம். (29-ஆக.) இன்று வந்த செய்திகள் சில.......

1-நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒப்புக் கொண்டார் பிரதமர்

2-லோக்சபாவில் இரு எம்.பி.க்கள் மோதல்

3-டி.வி. நடிகையை அடித்து உதைத்த மர்ம ஆசாமிகள் - மும்பையில் பட்டபகலில் கொடூரம்!! 

4-பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி மாணவர்களிடையே நடந்த பயங்கர மோதல்

5-மேட்டூர் அணை, டெல்டா நீர் திறப்பு, இன்று காலை முதல், வினாடிக்கு, 18,000 கன அடியாக குறைக்கப்பட்டது

6-தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு  மயக்கமடைந்தார்.

7-பெரியதாழையில் தடையை மீறி தாது மணல் ஏற்றிச் சென்ற லாரியை மீனவர்கள¢ சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். 

8-ரவுடிகளின் அராஜக அட்டூழிய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியும், குண்டர் தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த கோரியும் புதுவையில் வியாபாரிகள் இள்று கடையடைப்பு 

9-பில்லி, சூன்யங்களில் ஈடுபடும் மோசடி மந்திரவாதிகளுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் புதிய சட்டம் இயற்றி மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.

10- பலாத்காரம் செய்தவருக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டாலும், குற்றவாளியின் சிறை தண்டனையை நீதிமன்றங்கள் குறைக்கக் கூடாது   

http://www.biography.com/imported/images/Biography/Images/Profiles/G/Mahatma-Gandhi-9305898-1-402.jpg

இதுதான் நாட்டின் பொழுதுபோக்கு  என்றால்...அண்ணல் காந்திஜி! நீ  வாங்கித்தந்த சுதந்திரத்தை யார் இப்படி தந்திரமாக...தரித்திரமாக மாற்றியது...?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1