google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கோட்டு மோடிக்கு லட்டு அய்டியாக்கள்

Thursday, February 19, 2015

கோட்டு மோடிக்கு லட்டு அய்டியாக்கள்

ஒபாமாவின் இந்திய வருகையின் போது பிரதமர் மோடி அணிந்திருந்த அவர் பெயர் பதிவிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான  விசேசமான கோட் நேற்று ரூ.1.39 கோடி ஏலத்தில் விடப்பட்டு அதன் வருமானம் கங்கையின் தூய்மை  .திட்டத்துக்கு செலவிடப் போகிறார்கள்

இதன்மூலம்  பிரதமர் மோடியின் நல்லெண்ணத்தை புரிந்து கொள்ளாமல் நக்கலடித்த ஊடகங்கள்,எதிர்கட்சியினர் அனைவர் வாயையும் அவர் அடைத்துவிட்டார் 

ஆக மொத்தத்தில்......
செலவு பத்து லட்சம் வரவு பத்து மடங்கு அடடா... இவரைப் போல் முந்தைய பிரதமர்கள் யாரும் இல்லையே என்று ஏங்க வைத்துவிட்டார்

இந்தியாவை முன்னேற்ற இன்னும் இது போன்ற சில இனிப்பான (லட்டு) அய்டியாக்களை சில அய்டியா அய்யாச்சாமிகளிடம் கேட்டப்போது......

அய்டியா-1
ஸ்பெஷலாக 100 கோடி சீனா பட்டுப்பூச்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட பட்டு நூலிழைகளைக் கொண்டு  ஜப்பானில் நெய்யப்பட்ட பட்டு வேஷ்டியில் அவரது பெயரை ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கற்களால் பதிக்கப்பட்ட  தங்க சரிகை  வேஷ்டியை அணியலாம் 

உடனே அவரது எடுபிடி ஊடகங்களை கூப்பாடு போடச் சொல்லி  உலக மக்களை வியக்கவைத்து அப்புறம் ரூ.100 கோடிக்கு ஏலம் விடலாம் 
அதில் வீட்டுக்கொரு துடைப்பம் இலவசமாக கொடுத்து  #ஸ்வாட்ச் பாரத்  திட்டத்தை நிறைவேற்றலாம் 
அய்டியா-2 
சூப்பர் மேன்,ஸ்பைடர் மேன்..வரிசையில் உலக பிரசக்தி பெற்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவர்ந்த சக்திமான் போன்று ரூ.1 கோடி செலவில் தங்க உடையில் உடையில் நடுவில் தாமரை சின்னத்தை வரைந்து  இங்கிலாந்து ராணியை வரவழைத்து படம்காட்டலாம் 
அதையும் கூப்பாடு போடுவோர் வாயை அடைத்து ரூ.100 கோடிக்கு ஏலம் விட்டு.........

அய்யா பிரதமர் மோடி அவர்களே ஏழைகளின் ராஜாவே 
இங்கே சென்னையில் கூவம் என்ற ஒரு சாக்கடை நதி நாறிக்கொண்டு ஓடுகிறது கொசுக்களின் கோட்டையாக உள்ளது அதை சுத்தப்படுத்த இந்த மோடிமான் உடையில் வரும் துட்டை தந்து உதவுங்கள் அய்யா........
 2016-ல் சென்னை கோட்டை உங்கள் வசமாகும்      

மக்களே! இது போன்ற நிறைய திட்டங்கள் உங்களிடம் இருக்கும் அல்லது இன்று இரவு தூங்கும் போது மோடி மந்திரத்தை சொல்லிக்கொண்டு படுங்கள் கனவில் ஏதேனும் நல்ல அய்டியாக்கள்  வந்தால் உடனே தொடர்புகொள்ளுங்கள்......

இப்படிக்கு

அய்டியா  அய்யாசாமி  







யோவ்............அய்டியா அய்யாசாமி
போயா உன் அய்யிடியாவும் இதுவும்......


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1