google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டர் ஜல்லிக்கட்டு

Monday, January 19, 2015

ட்விட்டர் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு  தடை செய்யப்பட்டதால் கடந்த சில தினங்களாக  ட்விட்டரில் நடந்த  காமெடி கலாட்டாக்களின் தொகுப்பு.....

 
கோபாலன்@Goindiapal 
யாருங்க அவர் ரோடு போட வச்சிருக்கற ஜல்லிய எல்லாம் மூட்டை கட்டிக்கிட்டு இருக்காரு ஜல்லிக்கட்டுங்கறத தப்பா புரிஞ்சிகிட்டாருங்க #அவ்வவ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
ஜல்லிக்கட்டு மேற்கத்திய கருத்தாக்கம்; பாஜக அதை எதிர்க்கிறது: அமைச்சர் மேனகா காந்தி # மேடம், நம்ம ஹேர் ஸ்டைல் கூட ஃபாரீன் ஸ்டைல் தான்

குண்டுக் குழந்தை@gundugopal 
ஜல்லிக்கட்டு வரலாறு தெரியாமல் மேனகா பேசக்கூடாது: ராமதாஸ் # அப்ப சமைக்க தெரிஞ்சா தான் சாப்படுனுமா டாக்டர்

அழகிய தமிழ் மகன்@kaviintamizh 
ராமர் இலங்கைக்கு போற வழியில் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கினார்னு சொல்லுங்கப்பா அப்புறம் பாருங்க அவங்களே தலைமை தாங்கி நடத்துவாங்க..

கருத்து கந்தன்©@karuthujay 
”ஜல்லிக்கட்டு” தமிழர்களின் விளையாட்டே கிடையாது –மேனகாகாந்தி #ஆமா, அமெரிக்காவுல வாஷிங்டன்ல எட்டாவது புளோர்ல எல்லாரும் கூடி வெளாடுர வெளாட்டு-/

காட்டுப்பயல்@sundartsp 
ஜல்லிக்கட்டு ரிஸ்காம் கிரிக்கெட்லயே போன மாசம் ஹியூக்ஸ் இறந்துட்டானே அப்ப அதையும் தடை பண்ணுங்க பார்ப்போம்

நாட்டுப்புறத்தான்@naatupurathan 
என்னதான் வீரவிளையாட்டு,தமிழ் பாரம்பர்யம் என்றாலும் இதைமட்டும் ஏனோ ஏற்று கொள்ள முடியவில்லை; உயிர்பலிகளும் காரணமாக இருக்கலாம்! ஜல்லிக்கட்டு!

கத்தி UPGRADE'புலி'@thunder__fb 
இன்னைக்கா? நாளைக்கா? அப்படின்னு கத்தி பட ரிலிஸ் போல "தமிழக"மக்கள் இன்னொரு ரிசல்ட்ட எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க : )#ஜல்லிக்கட்டு

சிங்கார வேலன் ‏@AnishBon
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி-திமுக போராட்டம்#இங்க பார்றா எப்படியெல்லாம் ஒட்டு புடிக்கிறாங்க

கி.பிரபு@muthu89916788 
ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுன்னு யார்ங்க சொன்னது அப்பாவி விலங்குக்கு சராயம் ஊத்திட்டு கூட்டம் முடக்கறதுதான் வீரவிளையாட்டா

எமகாதகன்!!!்@Aathithamilan 
ஸ்டாலின் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையைப்போல் பணியாற்றுவார் -துரைமுருகன் #ஜல்லிக்கட்டுக்கான தடையை விடுவிக்க விரைவில் நடவடிக்கை -ஓபிஎஸ்

அலெர்ட் ஆறுமுகம்@6_mugam 
//ஜல்லிக்கட்டு விழாவை மீண்டும் நடத்த வேண்டும்: விஜயகாந்த்.#கோவில்_காளையே சொல்லிட்டாரு நடத்துங்கப்பா ஏய்..

தோழர் உசிலம்பட்டி @ram89prabhakar 
ஸ்டாலின் ஒரு ஜல்லிக்கட்டு காளை போல் பணியாற்றுவார் - துரைமுருகன் #ஜல்லிக்கட்டுக்கே தடை ஜல்லிக்கட்டு காளை அடிமாடுதான்

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
ஜல்லிக்கட்டுக்குத்தடை தமிழர்களின்உணர்வுகளை சீண்டிப்பார்க்கும்செயல் -சீமான் # சத்யராஜே சும்மா இருக்கார்.ஹீரோக்கு இல்லாத அக்கறை நமக்கு ஏன்?

ச ப் பா ணி@manipmp 
ஜல்லிக்கட்டுகு தடை விதித்தால் முதலில் வருத்தப்படுவது மெகா டிவிதான் #அந்த ஒரு கேசட்தான்டா இருக்கு

Paramasivam.Y@SivaYp 
பல ஆயிரம் கிராமம் இருக்கும் தமிழ்நாட்டில், ஒரு சில கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு ஒட்டுமொத்த தமிழர்க்கானது இல்லை #அரசியல்வாதிகளின் பொய்

muthusiva@s_muthusiva 
நாம் ஒவ்வொருவருமே மனதோடு ஜல்லிக்கட்டு செய்து கொண்டே தான் இருக்கிறோம்..அதுவும் திமிறி நழுவு கொண்டே தான் இருக்கிறது...




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1