google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தேர்தல்-பாஜக கூட்டணியை ஆதரிக்கலாமா...?

Friday, February 7, 2014

தேர்தல்-பாஜக கூட்டணியை ஆதரிக்கலாமா...?


தேர்தல் வரும்போதெல்லாம் குடு குடுப்பைக்காரன் சொல்வது போல் தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர் என்றும் சொல்வது ..........தமிழகத்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கும்..டும்...டும்  மோடியால் நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கும்...டும்...டும்....
modi

பாஜக  ஆட்சிக்கு வந்தால் நாட்டில் மதவெறிய தூண்டுவார்கள் அவர்களது ஒரே கலாச்சாரம் என்ற  திருமந்திரம் இந்திய நாட்டின்  மத ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் என்றும்...........

ஊழல் விஷயத்தில் காங்கிரஸ்-பாஜக இரண்டுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது என்று  அய்யா எடியூரப்பாவை கைகாட்டுபவர்கள்  ஒரு பக்கம் என்றும்..........

நாட்டின் பிரதமராக வர ஆசைப்படும் மோடி முதல்வராக இருக்கும் குஜராத் படிப்பறிவில் பின்னடைந்துள்ளது என்றும் பெரு முதலாளிகளை வளர்ப்பதில் மோடி சளைத்தவர் அல்ல என்று நானோ காரை சுட்டிக்காட்டுபவர்கள் ஒருபுறம் மல்லுக்கு நிற்க ..........

அதேநேரம்.............





நரேந்திர  மோடி குஜராத்தை மின்வெட்டு இல்லாத ஒளிரும் மாநிலமாக மாற்றிவிட்டார் தொழில் புரட்சி செய்துவிட்டார் என்றும்......

சிறுபான்மை மக்களை அரவணைத்து கொள்(ல்...லல்ல...)வதில் வல்லவர் என்றும்.........

டீக்கடை வைத்திருந்து வாழ்க்கையில் உயர்ந்தவர்...கட்சிக்காக தன்னை முழுவதும் அற்பனித்துக்கொண்டு குடும்ப வாரிசு சண்டைகளுக்கு வழி வகுக்காதவர்இந்திய  நாட்ட்டைக் காக்க  அவதாரம் எடுத்து வந்தவர் என்றும் போற்றுபவர்கள் இன்னொரு புறம் சூடம் அடித்து சத்தியம் பண்ண....

அது சரி.........பகுத்தறிவுவாதிகள் நிறைந்த நம்ம தமிழ்நாட்டில் பாஜக நிலை என்ன....?

பொன்.ராதாகிருஷ்ணன் அண்ணேன்....கூட்டணி கூட்டணி என்று எப்போதும் நீங்க சொல்வது உங்க கூட்டணியில் இங்கே யார்...? இருக்கிராயிங்க என்பது மட்டும் தெரியவே மாட்டேன்கிறது...

இப்ப புதுசா உங்க கூட்டணியில பகுத்தறிவு புலி மதிமுக ஒரே தலைவரும் ஒரே தொண்டருமான  வைகோ அண்ணேன்  வந்திருக்காக ....

                                          image credit  thanks-dhinamalar

இன்னும்  உங்களுக்கு அப்பப்ப  வைத்தியம் பார்க்க பாமக மருத்துவர்கள் பெரிய அய்யா சின்ன அய்யா கண்ணா...இரண்டு லட்டு தின்ன ஆசையா...? என்று வருவாக.........

காங்...தன் குடும்பத்துக்கு தரும் குடைச்சல் தாங்க முடியாம திமுக தலீவரு அய்யா அண்ணன் தம்பி தங்கை மாமன் மச்சான்...என்று எல்லோரும் குடும்பத்துடன்  வந்தாலும் வருவாக... 

அப்புறம்  நீங்க தேமுதிக தலைவர் உளுந்தூர்பேட்டையில் கூட்டிய கடல் (தண்ணி) தொண்டர்களை பார்த்து கதிகலங்கி அவரையும் மின்னல்...வாம்மா என்று அழாத குறையாக அழைக்க...........

எப்படியும்  நீங்க தேர்தலுக்குள் கூட்டனி வச்சிப்புட்டா சரிதான்


உங்களில் ஒருவன்@NamVoice 
தங்கள் கூட்டணியில் வைகோவுக்கு சீட் ஒதுக்குவது தொடர்பாக பாஜக ஆதரவு தினமலர் கார்ட்டூன் #சுயமரியாதை

கோவை_கமல்@KOVAI_KAMAL 
வைகோ முதல்லேயே பாஜக கூட்டணியில் சேர்ந்துட்டாருன்னுதாய்கழகத்தாருக்கு பொறாமை! # வாஜ்பாய் அரசில் நாலேமுக்கால்வருஷம் மினிஸ்டரா இருந்தவங்க தானே?

Ma_Na_Su@Ma_Na_Su 
காங்கிரஸார் வேண்டுமானால், தமிழக பாஜக-வை அணுகலாம்....செம கூட்டணி மூட்'ல இருக்காய்ங்க... ;)P #கூப்டுங்கய்யா குலாமை

பித்தன்@kiramaththan 
'மூன்றாவது அணி, இந்தியாவை மூன்றாம் தர நாடாக்கும்'- மோடி. அப்போ பாஜக, இரண்டாந்தர நாடாக்குமா பாஸ்?

பசி.! @Pa_Siva 
2000 பேரை கொன்னவன கொண்டு வந்து அரியாசனம் கொடுத்து அழகு பார்க்கபோறானுங்களாம்...அப்புறம் எப்படிடா இந்த நாட்ல அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.


Doha Talkies@dohatalkies 
இலங்கை பிரச்சனையை பாஜக சரியான முறையில் அனுகும். -வைகோ - //தலைவர் சொல்லிட்டார் ஜோரா கைதட்டுங்க 

இளைய ஜமீன்@GMakandh 
வண்டலூர் ல பாஜக கூட்டம் இதுல எதாவது குறியீடு இருக்கா

உடன்பிறப்பே @udanpirappe 
வண்டலூரில் பாஜக மாநாடு#ஒரு உயிரினத்தோட மனசை,இன்னொரு உயிரினத்தாலதான் புரிஞ்சிக்க முடியும்!அவ்வ்வ்வ்

தமிழ்ப்பறவை@Tparavai 
தமிழ்நாட்டுக்காரன் எல்லாத்துக்கும் கூட்டமாப் போய் கெத்து ஏத்திவிடுவான். ஆனா ஓட்டு மட்டும் போடமாட்டான்.இந்தவிசயம் மோடிக்குத் தெரியாது:)

ரைட்டர் பிசாசு@pisasukutti 
வண்டலூரில் பாஜக மாநாடு # மிருகவதை சட்டத்துல புடிச்சு உள்ள போடுங்க சார்

தில்லுதொர..@pbbalajii 
மோடி அலையால் பாஜக கூட்டணியில் யார் வேணாலும் வெற்றி பெறலாம்- இல கணேசன். #அடேய்! உங்க ஊர்ல தான்டா மோடி, எங்கூர்ல 2கேடி!

பூபதி .ஆ@boopathi_tcd 
மோடி ஜாதகத்தில் உள்ள சனி காரணமாக நாற்காலியில் அமர முடியாது.-- #மூலமா இருக்கும் எதுக்கும் ஆஸ்பத்திரி போய் பாக்கச் சொல்லுங்க பாஜக பார்ட்டீஸ்

செல்லம் பீனிக்சு@cbdaas 
லோக்சபா தேர்தல்: திமுகவுடன்- பாஜக ரகசிய பேச்சுவார்த்தையா?# தலீவரு நல்லா எழுதுவாறு திரைக்கதை # அப்படிப் போடு அருவாளை





என் வலைப்பதிவு மக்களே உங்கள் பார்வையில்.....
இந்தத் தேர்தலில்.....
தமிழர்கள் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை ஆதரிக்கலாமா...?




கட்சி வேறுபாடின்றி வாக்களித்து நாட்டு நிலவரத்தை அறியச் செய்த உங்களுக்கு நன்றி...............முடிவு-15/2/2014

thanks twitter friends.......

விரைவில்.............

sonia


தேர்தல்-காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கலாமா...?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1