நடிகர் திலகம் சிவாஜியின் சிலை மெரீனா கடற்கரை சாலையில் அது நிறுவப்பட்ட நாள் முதலே......இந்த சிவாஜி சிலை சினிமா அவர் நடித்த சினிமா படங்களைவிட பர பரப்பாக பல வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது
உண்மையில் அந்த சிலை போக்குவரத்திற்கு இடையுறாக உள்ளதா? அப்படியென்றால் அந்தச் சிலை நிறுவப்பட்ட வருடம் 2006-ல் அப்போதைய போலிஸ் கமிஷனர் அந்த சிலை போக்குவரத்திற்கு இடையூறு இல்லை என்று அறிவித்தது ஏன்...? சிக்னல் நிறுத்தத்தில்தானே அந்த சிலை இருக்கின்றது அப்படியென்றால் அது எப்படி சாலை போக்குவரத்திற்கு இடையூறு ஆகும் என்று கேட்பவரும் உண்டு
அரசியல் பழிவாங்கும் செயலா?
சிவாஜி சிலை அரசியல் காரணங்களுக்காக அன்றைய முதல்வர் நிறுவியதால் இன்று பிரச்சனையா...? அப்படியென்றால் சிவாஜி இன்றைய முதல்வருக்கும் முக்கியமானவர்களில் ஒருவர்தானே...?
சட்டம் தன் கடமையை செய்கிறதா?
தினம்தோறும் நூற்றுக்கணக்கான சட்ட வல்லுனர்களும் உயர் நீதி மன்ற நீதிபதிகளும் கடந்து செல்லும் சாலையில் சிவனேன்னு நின்று கொண்டிருக்கும் சிவாஜி சிலை சாலை போக்குவரத்திற்கு இடையூறு என்று அன்று அவர்களுக்கு தெரியவில்லையா...? தெரிந்தாலும் நமது சட்டபுத்தகம் ரொம்ப பெரியது படித்து முடிக்க இந்த காலதாமதம் ஆகும்தான் இப்போதாவது சட்டம் தன் கடமையை செய்கின்றதே சிலை வைக்கக் கூடாது என்று சொல்லவில்லை சிலைகளோடு சிலைகளாக இருக்கட்டும் என்று சொல்கிறது
நடிகர்களின் மௌனம்?
சிவாஜி எங்கள் நடிப்புக்கே இலக்கணம் வகுத்தார் என்று மூச்சுக்கு முன்னூறு நேரம் சொல்லும் நம்ம நடிகர்கள் அன்றும் இன்றும் வாய் திறப்பதில்லை என்றும் ஆட்சியாளர்களை எதிர்த்து வாய் திறக்கப் போவதில்லை நிஜத்திலும் நல்ல நடிகர்கள்
thanks-YouTube by NTVnewsTelugu1·
இவர்கள் சிலை வைக்க சொன்னார்களா?
பொதுவாக இதுபோன்ற நிறைய சாதி தலைவர்கள் அரசியல் தலைவர்கள் சிலையாக நாடெங்கும் நின்றுகொண்டு அவ்வப்போது சாதிச் சண்டைகளுக்கும் அரசியல் சண்டைகளுக்கும் வழி(லி) வகுக்கின்றன அய்யோ...பாவம் நாட்டில் இந்த தலைவர்கள் இறந்தப் பிறகு இப்படி எல்லாம் நம்மை நாட்டு மக்கள் நாறடிப்பார்கள் என்று நினைத்திருந்தால் அன்றே அவர்கள் எல்லோரும் எங்களுக்கு சிலையும் வேண்டாம் சிதைவும் வேண்டாம் ஆளை விடுங்க மக்கா என்று எழுதி வைத்து இறந்திருப்பார்களோ...? என்றும் நினைக்க தோன்றுகின்றது
சமுக தளங்கள் சொல்வதென்ன?
RajanLeaks
சிவாஜி சிலை இடமாற்றம்: ரசிகர்கள் அமைதி காக்க ராம்குமார், பிரபு வேண்டுகோள் # அடேய்ய்.. ஒங்க ஓவர் கான்பிடன்ஸுக்கு வரமுறயே இல்லையா?
யாழினி அப்பா
@thangavasanth
அகற்றாங்கன்னு தெரிஞ்சும் சிரிச்சுகிட்டே நிக்குறார் சிவாஜி.
#நடிகன்டா
என்னங்க சிவாஜி படுபாவி பசங்க இப்படி பண்ணிட்டானுகளே..
ஆளவந்தான்
@ShahLeaks
நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி
Satheesh Kumar
@saysatheesh
சிவாஜி சிலை அகற்றுவதற்கான காரணங்கள், மன்றோ, பெரியார், அண்ணா, எம்ஜிஆர், இந்திரா சிலைகளுக்கும் பொருந்துமில்லே? #சும்மா கேட்டேன்
ரைட்டர் வாழவந்தான்
@sumusuresh
சிவாஜி சிலை இடமாற்றம், ரசிகர்கள் அமைதிகாக்க ராம்குமார்,பிரபு கோரிக்கை! #இது புதுவிதமான கம்புசுத்தலாயிருக்கு!!
திரு.முட்டாள்
@imuttaal
சிவாஜி:
கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி.அதனால பறந்து போயிடுச்சு... பத்மினி:
ரெக்கை முளைச்சா பறந்து போகமா.பின்ன என்ன நீந்தியா போக முடியும்???
நாடோடிச் சிறுத்தை
@T_cheeta
நடிகர் திலகர் சிவாஜி சிலை அகற்ற திட்டம் #எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கு ஒரு இடம் வேண்டும்
கொக்கி
@Ko_kki
பறவைகளின் ஒரு தரிப்பிடத்தை அகற்றிவிட்டது தமிழக அரசு #சிவாஜி தரிப்பிடம்
Tenttu Kottagai
@ThangarajMarapp
மேலை நாட்டில் எமது சிவாஜி பிறந்திருந்தால் இன்று வீதிக்கு ஒரு சிலை வைத்திருப்பார்கள்,ஆனல் தமிழகத்தில் பிறந்து விட்டான்
ச ப் பா ணி
@manipmp
மெரினா சாலையில் இருந்து சிவாஜி சிலையை இடமாற்றம் செய்யலாம் என்று ஐகோர்ட் தீர்ப்பு
#பேசாம நீங்க புதுவைக்கே போயிருங்க சிவாஜி
கோவை_கமல்
@KOVAI_KAMAL
அகற்றப்படவிருக்கும் சிவாஜி சிலை சிலகாலம் "ஆரண்யவாசம்" செய்தபின்னர், மீண்டும் சாலைப் பிரவேசம் செய்யும்!
இப்படி நிறைய ட்விட்டர்கள் தங்கள் உணர்வுகளை பிரதிபளித்துள்ளார்கள் நன்றி....ட்விட்டர் நண்பர்கள்
வேண்டாம் என்று நினைப்பவர்கள் இப்பதிவின் கருத்துரையில் மறுப்பு தெரிவித்தால் இப்பதிவிளிருந்து நீக்கப்படும்
வேண்டாம் என்று நினைப்பவர்கள் இப்பதிவின் கருத்துரையில் மறுப்பு தெரிவித்தால் இப்பதிவிளிருந்து நீக்கப்படும்
thanks-YouTube by kavitha bontemps
அரசியல் போன்று இதுவும் எதுவும் என்னைப் போன்ற பாமரனுக்கு மண்டையில் ஏறமாட்டேன் என்கின்றது.........
என் பதிவுலக நண்பர்களே
உங்கள் பார்வையில்............
சிவாஜி சிலை இடமாற்றம் நியாயமா?
(குறிப்பு-பெரிய அப்பாடக்கர்களே மௌனகுருக்களாக மாறிவிட்டப் பிறகு நமக்கு இது தேவையா என்று நினைக்காமல் உங்கள் ரகசிய வாக்குகளை பதிவிட்ட அனைவருக்கும் நன்றி...முடிவு-1/2/2014 )
thanks to all twitters and their tweets
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |